உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/972

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

413 திருப்புகழ் உரை ليلقضاهُموايم (பத்திரத்திலும்) வாளினும் மிக்க கூரிய கண்ணாம் (கயல்) மீன்கள் - கயல் மீன்களாம் கண்கள், (வித்துரு) மின்னல்போல ஒளிவிடுவதாய், வில்லை வளைத்தது போன்ற நெற்றி, (இவைகளுடன்) உரு அமைந்த பற்களைப் பளிரெனச் சிரித்துக் காட்டிக் காமத்தை ஊட்டும் மாயவித்தைப் பேச்சுக்களைப் பேசி. பச்சை ரத்ன மயில்போலத் தெருவில் ஆனைக்கு உற்ற மதம்போன்ற மதத்துடன் நிற்பார்கள்.இத்தகைய பொதுமாதர்களின் வலையிற்பட்டு, உழைத்து, படுகுழியில் விழுந்த யானை போல மனம் குலைந்து நிற்பேனோ! தத்த னத்தனத.டுக்குடுக்குடென்று சங்கும், பேரியும் (முரசும்). ஒலிசெய்து, கடலும், திக்கில் உள்ள சிறந்த அஷ்டகிரிகளும் நெகிழ்ந்து கட்டுவிட, மேக இடியைக் கேட்டு (சர்ப்பம்) ஆதிசேடனது முடிகளும் (சக்கு) கண்களும் (முக்கிவிட) - துன்பம் உற, வாள் ஏந்திய துஷ்ட அசுரர்களின் உடல் அ ழிதர ஜெயம் கொண்ட ஒளி வாளை - வேலாயுதத்தை (அருளி) பிரயோகித்து, தேவர்களுக்கு (அதிபதிப்பதத்தை) தலைமை. யாம் நிலையை, (உறுவித்து அளித்து) சேரும்படி அருள் செய்து, (மதி) யானை - ஐராவதம் வளர்த்த கிளியாம் தேவசேனையைத் திருமணஞ் செய்துகொண்ட வேலனே! வெட்கப்படும்படிப் பிரமாவைப் பிடித்து அவனது குடுமித்தலையை அலைவித்து, அவனைச் சிறையிலிட்டு, ஜீவன் முத்தர்களாம் பெரியோர் புகழ்கின்ற திருவிற்குடி என்னும் தலத்தில் ஆசை பூண்டு மகிழ்கின்ற தம்பிரானே! குழியுற்ற அத்தியென மங்குவேனோ)