பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/982

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவளுர்) திருப்புகழ் உரை 423 சேல் மீனோடே சேர்ந்து (ஆரால்) ஆரல் மீன்கள் (சாலார்) மிகுந்து நிறைந்துள்ள சீர்பெற்ற திரு ஆரூரிற் பெருஞ்செல்வமே! சேயே! வேளே! பொலிவுள்ளவனே! தலைவனே! தேவனே! தேவப்பெருமாளே! (ஏசத் தகுமோதான்) 823. (முருகா) நீதான் எவ்வகையாலும்-எல்லா வகையாலும்-(என்மீது)-நீண்ட ஊழிகாலம் வரையில் (எப்போதும்) கிருபை கூர்ந்தவனாகி. சிறந்த (தானத் தனமாக) தானப் பொருளாக மேலான ஞானபீடமாகிய உனது திருவடியைத் தந்தருளுக. பிரமாவின் மைத் துனனாகிய செவ்வேளே! - வீரனே! சற்குண சிலனே!

  • ஆறாதாரங்களிலும் ஒளியாய் விளங்குபவனே! - திருவாரூரிற் பெருமாளே!

(மாஞானக் கழல்தாராய்) 824. மகரமீனும் தன்முன் (நிலைகலங்கிக்) கெட, இரண்டாய், குமிழம்பூப் போன்ற மூக்கை (அடைசி) நெருங்கிச் சேர்ந்து, நீளம் மிக்க அம்புகள் என்று சொல்லும்படி நீண்டுள்ளதாய்ச் செழிப்பு மிக்க கண் என்னும் வலை கொண்டு உலகில் மனிதர்களின் = ஆண்மக்களின் வாழ்நாள் (அடங்க) முழுமையும் (அல்லது சுருங்கும்படி) (வருவார் தம்) எதிர்தோன்றி வருகின்ற மாதர்களின் பேசும் பேச்சிலும், கஸ்துாரி, (களப பாடீரம்) (பாடீர களபம்) சந்தனக் கலவை கொண்டுள்ள குடம் போன்ற கொங்கைமீது (வாவி) தாவிப்

  • ஆறாதாரங்கள் - பாடல் 220-பக்கம் 56 பார்க்க