பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 105 1039. தீயும், காற்றும், நீரும், மண்ணும், விண்ணும் ஆகிய ஐம் பூதங்கள் நிறைந்துள்ளதும், (பசு)-ஜீவான்மாவும்,(பாசம்) தளைகள் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும், கூடியதாயுள்ளது. LDTGTIT (தேகந்தனை) இவ்வுடலை (நிலையே | நிலைத்திருக்கும்படிப் பொருந்த வைத்து, நல்வினை தீவினை யென்னும் షేషిః முடியும்படியான திறமை வாய்ந்த செயல் (எதையும்) ஒயும்படி பிறப்பு ஒய்வுறும் வண்ணம் - 600 + (பதின் உறழ்நூறு - பதின்மடங்கு நூறு -1000 + (பதின் இருபது நூறு - பத்து இருபது நூறு =10x20x100) + 20,000 ஆக 21,600மூச்சுக்கள் ஒடுகின்ற இந்த சிற்றுயிர் (மீளும்படி) விடுதலையடையும்படி - ஒய்வடையும்படி நல்ல சிவயோகத்தைப் பயிலும் பாக்கியம் எனக்குக் கிடைக்காதோ-என் பிறப்புத் தொழில் ஒயாதோ' மூங்கிலும், (கணியும்) வேங்கை மரமும், விளாமரமும், இருக்கின்ற (புனம்) மலைச்சார்பான கொல்லையில் இருந்த (சிறுமி) வள்ளியின்-மணவாளனே! மீன்கள் உலவுகின்ற கடல் ஏழும் தீப்பட்டு வறண்டு போகவும், வேதத்தை வாய்விட்டு உரைக்கும் ஒப்பற்ற நான்கு வாய்களையுடைய பிரமனும், (குலகிரி) உயர்ந்த மலையான கிரெளஞ்சத்தின் (பாலும்) இடங்களும் (தளைபட) சிறையிற் பட்டு (வேதனைப்பட்டு) அழுங்க அல்லது பிரமன் ( ரிபால்) கந்தகிரியில் ஓரிடத்தே சிறைபட்டழுங்கவும், (மா - கந்தரம் - அதில்) பெரிய மேகத்தினிடையே மறைந்து போர் செய்த குரனுடைய x'சிறைபுரிந்திடுவித்தனன் கந்தமாஞ் சிலம்பில்’ - கந்தபுரா. 1-16:15 0 சூரன் முருக வேளொடு செய்த போரில் அடிக்கடி மறைந்து நின்று போர்செய்தான். அப்போதைக்கப்போது ஆண்டவர் சூரனதுமாயைப்போரை வென்றனர் . "மாயை நீரால் அப்புறத் தண்டம் போனான். பின்னரும் கரந்து செல்லப் பிரானும் அவ்வண்டந்தோறும். விடாது தொடர்ந்தமர் இயற்றிப் போனான்", "ஞாலமும் ககன முற்றும் மாயிருள் உருவம் கொண்டு மறைந்து நின்றார்க்க லுற்றான்". கந்தபுரா 4-13.272, 273, 456