உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 முருகவேள் திருமுறை 17- திருமுறை 1072. உபதேசம் பெற தனனா தனத்த தனணா தனத்த தனனா தனத்த தனதான கருவாய் வயிற்றி லுருவா யுதித்து முருகாய் மனக்க வலையோடே. கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த தலைபோய் வெளுத்து மரியாதே; இருபோது மற்றை யொருபோது 'மிட்ட கனல்மூழ்கி t மிக்க புனல்மூழ்கி. # இறவாத சுத்த மறையோர் துதிக்கு மியல்போத கத்தை மொழிவாயே! அருமாத பத்தoஅமரா பதிக்கு வழிமுடி விட்ட தனைமீள. அயிரா வதத்து விழியா யிரத்த னுடனே பிடித்து முடியாதே; திருவான கற்ப தருநா டழித்து விபுதேசர் சுற்ற மவைகோலித்.

  • இட்ட கனல் = வளர்த்த மூலாக்கினி f மிக்க புனல் = மதி மண்டலச் சுத்த கங்கை 'அருணாசலத்தின் உடன் மூழ்கி" - "அமுதக் கடல் மூழ்கி" . எனவருவன காண்க. திருப்புகழ், 790, 867.
  1. இறவாத சுத்த மறையோர் நித்தத்துவம் பெற்ற அகஸ்தியராதி நாதாக்கள். இவர்களைப்" பிறந்து இறவாத சுகத்தில் அன்பர்" -என்றார் 1073ஆம் பாடலில்

X ஆதபம் = ஒளி, o இந்தப் பாடலின் பின் நான்கு அடிகளிற் குறித்த வரலாறு பின் சூரன் திக்கு விஜயம் செய்தபோது விண்ணுலகுக்குச் சென்றான். அப்போது இந்திரன் அவனுக்குப் பயந்து தன் மனைவியுடன் குயில் உருவம் கொண்டு ஒடி ஒளித்துக் கொண்டான். தேவர்கள் எல்லாம் சூரனால் துன்புறுத்தப் பட்டனர். அதனால் - பொன்னகர் எங்கணும் பொலிவு மாய்ந்ததே" - கந்த புரா. 2-12-109. விண்ணுலகில் இருந்த தேவர்கள் சூரனது ஏவல்களைச் செய்யும் பணியில் அமர்ந்தனர்; அதனால் விண்ணுலகம் - அமராபதி - வழி