உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 முருகவேள் திருமுறை 17- திருமுறை 1085. இயலிசைபாட தனதன தானத் தனதன தானத் தனதன தானத தனதான கருமய லேறிப் பெருகிய காமக் கடலினில் மூழ்கித் துயராலே. கயல்விழி யாரைப் பொருளென நாடிக் கழியும நாளிற் கடைநாளே, எருமையி லேறித் தருமனும் வாவுற் றிறுகிய பாசக் கயிறாலே. எனைவளை யாமற் றுணைநினை வேனுக் கியலிசை பாடத் தரவேணும்; திருமயில் சேர்பொற் புயனென வாழத் தெரியல னோடப் பொரும்வீரா. செகதல மீதிற் பகர் *தமிழ் பாடற் செழுமறை சேர்பொற் புயநாதா: பொருமயி லேறிக் கிரிபொடி யாகப் புவியது சூழத் திரிவோனே. புனமக ளான்ரக் கணதன மார்பிற் புணரும்வி நோதப் பெருமாளே (91) 1086. திருவடி பெற தனதன தானத் தனதன தானத் தனதன தானத தனதான t குடலிடை தீதுற் றிடையிடை பீறிக் குலலிய தோலத் தியினூடே # குருதியி லேசுக் கிலமது கூடிக் குவலயம் வானப் பொருகாலாய்,

  • தமிழ் பாடற் செழு மறை - செழு மறைத் தமிழ் பாடல் - திரு முருகாற்றுப்படை - எனக் கொள்ளலாம்.

- பாடல் 1030-பக்கம் 90 கீழ்க்குறிப்பு 1 குடல் வாதம் முதலிய நோய்களால் குடல் தீதுறல் # குருதி சுரோணிதம்-உதிரம்.இது சுக்கிலத்தோடு கலந்து சிசு உற்பத்திக்குக் காரணமாகும் மகளிர் இரத்தம், பூதங்களாலும், பொறி முதலியவற்றானும், வாயுக்களானும் நாடிகளானும், பரிணமித்துச் .