பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/213

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 205 நெருங்கி வரும் (போர்க்கை) போர்க்களத் திடத்தே அசுரர்களின் சுற்றத்தை மாய்த்தொழித்துத் தேவர்களைச் சிறையினின்றும் மீட்டருளிய பெருமாளே! (உன தாட்கள். ஏத்த மதி தாராய்) 1094. கூந்தலின் வரிசை கலைய, கண்கள் குவிய வளைகள் கலகல என்று ஒலிக்க, அமுதம் போன்ற மொழிகள் (பதறி எழ) பதறுதலுடன் பெருக அணிந்துள்ள முத்துமாலை அழகு ஒழுகுவதும், புளகம் கொண்டதுமான கொங்கையின் மீது துவள, இடை நெகிழ மிகவும் காம இன்ப ரச நிலைபெருக, அதிக ஆசையுடன் - உள்ளம் உருக ஏற்படுகின்ற புணர்ச்சியைத் தருகின்ற பெண்களின் கொடுமை என்று சொல்லத் தக்க வஞ்சகச் சூழ்ச்சியிலே (என்புத்தி) அழிந்துபோகாமல் - உலகம் முழுமையும், மயில்மீதேறி ஒரு நொடிப்பொழுதில், வலம் வந்த உனது இரண்டு - நறுமணம் வீசும் மலர்ப் பாதங்களைத் தந்தருளுக வளைந்துதள்ள அலைகடல் வற்றிப் போம்படிச் செலுத்தின அம்பைக் கொண்ட வரதன், இரண்டு மருதமரங்களைத் தாக்கி அருள்பாலித்த (அபிராமன்) அழகன் - கோடுகளை உடைய பாம்பின் - மேலே துயில்கின்ற வரதன், விஜயலக்ஷமியின் கணவன், ஆகிய திருமாலின் மருமகனே போர்க்கு முடுக்குடன் வந்த அசுரத் தலைவர்களின் - சேனைகள் சிதற, மலைதுாள்பட, அசுரர்தலைவன் சூரனது தலை சிதறிவிழ, (தகனம் எழ) நெருப்பு பெருகி எழ, விரைவிற் செலுத்தின கூரிய வேலனே! முத்துமாலை, மணிமாலை இவை விளங்கும் குறவர் குலத்து அழகிய மகள் - வள்ளியின் கணவனே! சகல கலைகளிலும் முற்றும் வல்ல பெருமாளே! (மலரடியை அருள்வாயே)