பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/253

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 245 (துடி உடுக்கை போன்ற இடை (தனம்) கொங்கையின் பருமையால் - நெகிழ்ச்சி உறவே, தளரவே - துரங்குவதற்குப் ப்ொருந்தியுள்ள படுக்கையிற் புணர்ச்சி கூடுபவர் ஆகிய பொதும்கள் ரின் வசத்தில் அகப்பட்டு (சுழற்சி) மனக் கலக்கம் உறாமல் - அழிதல் இல்லாத (இயல்) ஒழுக்க நெறியைத் தெரிந்து, (அவலமான்து வீணான்து பயனற்றது - இன்னதெனத் தெரிந்து அதை ஒழித்து, உனது திருவடியைத் தொழ (மனம்) விருப்பங் கொள்ளும் எண்ணத்தைத் தந்தருளுவாயாக உலகம் முழுமையும் வியாபித்து நின்று அருள் புரிகின்ற திருமால், அவர் பெற்ற (பங்கயன்) பிரமா, நான்கு வேதங்கள், (உம்பர்) தேவர்கள் - இவர்கள் யாவரும் வாழக் கடலினின்றும் எழுந்த விஷத்தை உண்டு பெரிய நடனத்துடன் பேய்களுடன் எரியாடி, ரிஷப வாகனத்தைக் கொண்ட வரும - கொடுமை வாய்ந்து ஒளிவிடும் பாம்பு, இளம்பிறை இவைகளுடன் அலைவீசும் கங்கை நீர், குவளை மலர் - இவை சேர்ந்துள்ள சடையராம் சிவபிரானது அழகிய மேனி - குழையும்படி அன்புடனே தழுவின நாயகி (காமாட்சி) பெற்ற குமரனே தேவர்களின் பெருமாளே! (உனது தாள் தொழ மனம் தருவாயே) 1112. கஷ்டத்தைத் தருகின்ற நோய்களும், (தீமை) பிற_கெடுதிகளும் (அல்லது நோயாகிய கெடுதி) அமைந்துள்ள குடிசையாகிய இவ்வுடல், மகாமாயையாகிய - பிரபஞ்ச மாயையின் பந்தத்தை விடுகின்ற காலத்தை - (உயிர் போகும் சமயத்தை) அளவா - அளந்து தெரிந்துகொண்டு - (கத்த உறவோர் பாலர்) உறவோர் - பாலர் - கத்த சுற்றத் தாரும் - குழந்தைகளும் கூச்சலிட்டு அழத் தத்தை செறிவார் வாழ்வு) ஆப்த்துகளுடன் நிறைந்து நீண்ட வாழ்க்கையும், அந்த வாழ்க்கையில் -(கற்பு நெறி) ஒழுக்கத்துடன் சென்ற வழியும் (மாய அழியும்படி பெரிய காலன் - (யமன்) == அனுப்பின ஒரு துாதர்களும் வந்து (முட்ட) தாக்க வினைகளாலே மூடப்பட்டு அதன்படி ஏற்பட்ட ( விதியே) விதியின்படியே - (ஆ.வி) உயிரை இழப்பதன் முன்பாக