பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 253 சொற்களுக்கும், (கரணம்) மனதுக்கும் மேற்பட்ட நிலையதாய், குணமிலாத குணங் கடந்த நிலையில் (ஊடாடும்) விளங்குகின்றதும், பரிசுத்தமானதும், சார்பற்றதுமான பரவெளியைக் காண - மொட்டுக்கள் மலர்ந்துள்ள தாமரைகளாகிய சக்கரங்களாம் ஆறாதாரங்கள் அனைத்தினும் எல்லாவற்றின் மீதும் கடந்து சென்று-மதிக்கலாமிர்தம் பொங்கும் நிலைக்கு மேலானதும், முப்பதும், (ஆறாறும்) முப்பத்தாறும், முப்பதும் (30 +36 + 30 = 96) ஆக தொண்ணுாற்றாறு தத்துவங்களுக்கும் வேறானதுமான(முத்திர்ையாம்) அடையாள அறிகுறியான - மோன நிலையை அடையும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா! இவ்வளவினது என்று மனத்தால் அளத்தற்கரிய (வேதனம்) வேதனையோடு, கோ கோ உன்று அலறிக்கொண்டே பிரம தேவன் ஒடவும், (கிரவுஞ்சகிரி) சாய்ந்து மடிந்து விழவும், (எற்றிய) (அலை) வீசுகின்ற எழுகடலும் வற்றிப் போகவும், பகைவர்களாயிருந்த எத்தனையோ கோடிக்கணக்கான அசுரத் தலைவர்கள் - அழிபட்டு, ஒப்பற்ற சூரன் இறந்து படவும் பராக்ரமம் பொருந்திய வேலாயுதத்தைச் செலுத்தின - பன்னிருதோள் - வீரனே! திணைப்புனம் காவல் காத்திருந்த பத்தினி - கற்புடையநாயகி - வள்ளியின் தோளை அணைந்த (அல்லது வள்ளி உனது தோளை அணையப் பெற்ற) உத்தமனே! (மாறாது మిశ్రీ புத்தியுடன் பத்திசெய்த தேவ லோக்த்தின்ருடைய பெ (மோனம் அடைவேனோ) அருணகிரியார் குறிப்பார் - பத்தினி, ஞான பத்தினி - பாடல் 649, 1218

  • பத்தி செய் வானாடர் . சூர சம்மாரம் ஆனவுடன் தேவர்கள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. அவர் பத்தி செய்து முருகவேளைப் போற்றி வாழ்த்தின

"சுடர் வேல் கொண்ட தீர்த்தனை எய்திச் சூழ்ந்து சிறந்து வாழ்த் தெடுக்க லுற்றார்" 1. சூர் தடிந்தாய் அன்றே தொழு மடியேம் வல்வினையின் வேர் தடிந்தாய் மற்றெமக்கு வேறோர் குறை யுண்டோ! 2. தேறு முக மின்றித் திரிந்தேமை ஆளவன்றோ ஆறுமுகங் கொண்டே அவதரித்தாய் எம்பெருமான். (தொடர்ச்சி 254ஆம் பக்கம் பார்க்க)