பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 முருகவேள் திருமுறை [7- திருமுறை முத்தா முத்தி யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே (132) 1127. உபதேசம் பெற தனதனன தனதனண தந்தந்த தத்ததன தனதனன தனதனன தந்தந்த தத்ததன தனதனன தனதனன தந்தந்த தத்ததன தத்ததன தான அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் tஅகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு மாய. (279ஆம் பக்க தொடர்ச்சி) குப்பென் றெடுத்து முத்தாடும் குமரா முத்தம் தருகவே கொற்றக் கவிகை செழித்த கழுக் குன்றே முத்தந் தருகவே" சிவபிரான் முருகனை முத்தமிடுதலை . "சிவபிரான் முத்தாடும் அருமை மகனே". என்ற இடத்தும் (தெய்வ மணிமாலை 30) " உன்மத்த ரான கயிலாசபதி முத்தமிட்டுன்னை வாழ்த்தொலிகள் கொட்ட" (பழநிப் பிள்ளைத்தமிழ். 4) என்ற இடத்தும் காண்க "ஐம்பந்தொரக்ஷரம் = ஐம்பத்தொரக்ஷரம் அகரம் முதலான 51 அக்ஷரங்கள் - வடமொழி உயிரும் மெய்யும் ஆகிய ஐம்பத்தொரு அக்ஷரங்கள்: " அகாராதி கூடிகாராந்தம் ஐம்பத் தொன்றாகும்" - பாடல் 989-பக்கம் 860 பாடல் 96-பக்கம்800 கீழ்க்குறிப்புக்கள் பார்க்க "இணையார் கழலிணை ஐம்பத் தொன்றாகும்" - திருமந்திரம். 898 1 சகல கலைகள் - 64 கலைகள் அவைதாம்: அக்கர இலக்கணம். இலிகிதம் கணிதம், வேதம், புராணம், வியா கரணம், நீதி சாஸ்திரம், சோதிட சாஸ்திரம், தரும சாஸ்திரம் யோக சாஸ்திரம், மந்திர சாஸ்திரம், சகுன சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம்,