பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடிய நடலைய னடமிட வருபிணி குறுகி யிடஎம னிறுதியி லுயிரது கொடுபோநாள். குணகி யழுபவர் அயர்பவர் முயல்பவர் குதறு முதுபிண மெடுமென வொருபறை குணலை யிடஅடு சுடலையில் நடவு தோன். மலையில் நிகரில தொருமலை" தனையுடல் மறுகி யலமர அறவுர முடுகிய * வலிய பெலமிக வுடையவ ணடையவு மதிகாய. மவுலி யொருபது மிருபது கரமுடன் மடிய tவொருசரம் விடுபவன் + மதகரி மடுவில் முறையிட வுதவிய க்ருபைமுகில் மதியாதே; x அலகை யுயிர்முலை யமுதுசெய் தருளிய அதுல னிருபத மதுதணி லெழுoபுவி யடைய அளவிட நெடுகிய அரிதிரு மருகோனே. அவுன ருடலம தலமர அலைகட லறவு மறுகிட வடகுவ டனகிரி யடைய இடிபொடி படஅயில் விடவல பெருமாளே. (10) 'இராவணன் கயிலையை எடுத்தது - பாடல் 188:பக்கம் 440 t ஆரீ ராமர் ஒரு அம்பு விடுதல் - பாடல் 452. பக்கம் 6 கீழ்க்குறிப்பு # பார்க்க

  1. கஜேந்திரனுக்கு உதவியது. பாடல் 939-பக்கம் 731.

X பேய் முலை உண்ட வரலாறு - (கண்ணன்) கிருஷ்ணனுக்கு தாய் தேவகி மாமன் கம்ஸன். தன்னைக்கொல்லப் பிறந்துள்ளான் கண்ணன் என்று நாரதர் மூலமாய் அறிந்த கம்ஸன் பூதகி என்னும் ராக்ஷஸியை நல்ல பெண்ணுருவத்தோடு கண்ணனிடம் அனுப்ப, பூதகி சூ கிருஷ்ண சிசுவை எடுத்துத் தனது விஷம் தடவிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, குழந்தை அவ்வரக்கியின் கொங்கைகளைக் கையால் இறுகப்பிடித்துப் பாலுண்ணும் பாவனையில் அவள் உயிரையும் உறிஞ்சி அவளை இறக்கும்படிச் செய்தது. 'வஞ்ச முலைப்பேயின் நஞ்சமதுண்டவனே கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை