பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/341

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 333 1145. ஊன் உடலுடன் (வாத உயிர்) பிராணவாயுவைத் தரிப்பதாகி, (மட்டற) குறைவின்றி - நிரம்ப - ஊசாடு - ஊசலாடுகின்ற கூத்தாடுகின்ற அல்லது ஊசாடு - ஊசுதல் ஆடு - அழுகிப் போன தன்மையை உடைய பாழான இந்தக் (குடில்) குடிசை - உடலை எடுத்து, அதில் அந்த உடலில் இருந்தபடியே, (படி)鸞 யில் (ஓயாத ஓய்விலாத நீங்குதலில்லாத மாமயல் உழற்றினில் நிறைந்த (மயல்) காம இச்சை என்கின்ற (உழற்றினில்) சுழற்சியிற் (படு) அகப்பட்டுள்ள (வம்பனேனை) துஷ்டனாகிய எனக்கு - (ஊதாரியாய் விடு) வீண்செலவு செய்வதில் சாமர்த்தியத்துடன் இருப்பதும், (ஆராத காதலை - தெவிட்டாத ஆசை அடங்காத காமத்தை மனத்தில் வைத்திருப்பதும், ஊரார்களுடன் (எதிர்போய்) எதிர்த்துப் (பிணக்கில் நிற்பதும்) மாறு பாட்டுடன் ஊடி நிற்பதும் ஆகிய இக்குணங்கள் (முந்திடாதே) மேம்பட்டு என்னை அழுத்தாமல் - (அல்லது) உந்திடாதே என்னை தள்ளிச்செலுத்தாமல் - தேன் - இனிமை ஊறுகின்ற வாய்ப்பேச்சை உடைய வேசையர்பால் நான் ஒரு நாய் போல அவர் வசப்பட்டு நிற்பது சீர்கேடதான ஒழுங்கினத்திற் கொண்டு விடும் சிறுப்பிள்ளைத் தனமாம் என்று அறியாமையாம் என்று மூடத்தனமாமென்று உணர்த்திக், கடம்பின் சிதற் - குளிர்ந்த நல்ல மலர் கொண்டு மாலை தொடுக்கும் பக்தர்கள் (சீராடி) போற்றித் ##႕# (நாள்மலர் என) அன்று மலர்ந்த மலர் என்று பாராட்டிப் யப்படும் உனது திருவடியை உணரும் (போதகம்) ாப தேசத்தை எனக்கு நீ அருள் செய்வது எந்த நாளோ அதுக்கிரகிக்கும் நாள் எனக்கு என்று கிட்ைக்கும்! மால்நாக பாயலில் - பெரிய பாம்பாகிய ஆதிசேடனாகிய படுக்கையிற் படுக்கை கொண்டவர், மகாமேரு LINGMTVGNUGRINШ (மத்தாகும்படி) கடல்கடைந்த போது) கடலில் (திரித்துவிட்டவர்) - சுழல விட்டவர், மாடுகளுடன் மேய்க்கப் போய்வரும் இடையர் குலத்தவர், அன்றொரு நாள் வாவிவாய் - மடு இடத்தே ல் - "கூட்டிக் கன்று மேய்த்திட்டவர்" - திருப்புகழ், 373 "ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்" - பெரியாழ்வார். 1-7-11 'மாட்டுக் கோன் தங்கை மதுரை விட்டுத் தில்லைநகர் ஆட்டுக் கோனுக்குப் பெண் டாயினாள்". காளமேகம்.