உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 365 படமுக - முகபடாம் அணிந்துள்ளதும், (அடல்) வலிமை வாய்ந்ததுமான ஐராவதம் என்னும் யானைமீது ஏறுகின்ற பிரபுவுமான இந்திரனுடைய பயம் நீங்கவும், வடக்கிலுள்ள பருத்த அடிப்பாகத்தை உடைய, (வரை) கிரெளஞ்சகிரி அழியவும் வேலாயுதத்தைச் செலுத்தி, (வாவி) தாண்டிப் பாய்ந்து, மகர மீன்கள் சீறுகின்ற(பரவை) கடல் (கூப்பிட) கோகோ எனக் கூச்சலிட, அதை (மோதி) தாக்கியும் சூரன் (கேடு உற்று) அழிவு அடைந்து ஓட்டம் பிடிக்கும்படி அவனைத் தாக்கின. பெருமாளே! (காப்பதும் ஒரு நாளே) 1154. கோபித்து நீ விடுகின்ற கூரிய வேலாயுதத்தைக்காட்டிலும் அதிகமாக (கடை) நுனிப்பாகம் (சிவத்து) செந்நிறம் உற்று, நீடியவாய் - நீண்டுள்ளதாய், (மீன. ஒண் குழை) மகரமீன் உருவத்தில் உள்ள ஒள்ளிய குழைகளையும் (கடக்க ஓடிய) தான்டி ஒடியுள்ளதாய், ஆலால நஞ்சு அ (ன்) ன - ஆலகால விஷம் போன்றதாய், வஞ்சனை எண்ணங்கள் நீண்ட தூரம் அமைந்துள்ளதாய்க், கயல் மீன் போன்றதான கண்ணை உடைய மாதர்களின் கொவ்வைக் கனிபோன்ற வாயிதழ் ஊறலைப்பருகி, அவர்களின் அணி - அழகிய அல்லது ஆபரணங்கள் பூண்ட கழுத்தும் (ஆகமும்) உடலும் ஏகி பவம் கொடு ன்றுபடும் தன்மையில் (கலக்க) சம்பந்தப்பட, (மார்பகம்) மார்பிடத்தே உள்ள (பாடீர) சந்தனம், குங்குமம் அணிந்த கொங்கைகளின் மேல் - அழுத்தும் (ஆரமும்) முத்து மாலையும், (மோகாவடங்களும்) காமமயக்கத்தைத் தரும் (பிற) மாலைகளும், அறுக்கப்பட்டு ஒழுங்குள்ள கூரிய வாள்போன்ற நகமும் மேலே பட அணிந்துள்ள ஆடை வேறாக விலகி அலைப்புண்டு நழுவி விழ இப்படி மனத்தை உருக்கவல்ல (நாபியின்) கொப்பூழில் தொப்புளில் - (மூழ்கா) முழுகி, (மருங்கு இடை) இடையின் கண் - (அம்மாதர்களின் இடையிலே (செருக்கும்) களிப்புறும் (மோகன மனமயக்கம் (வார் அல்லது ஆர்) மிகுந்த அல்லது நிறைந்த (ஆதரங்களை) ஆசைகளை ஒழித்துத் தொலைக்க, ஒரு வழியும் (காணேன்) எனக்குத் தெரியவில்லை, உற்ற ஒரு துணையும் கூட காண்கின்றேன் இல்லை. இது மாணிக்க வாசகர் வர்ணித்த கண் வர்ணணையில் "ஈசற்கு யான் வைத்த அன்பின் அகன்று" - என வருவதுபோல - (பாடல் 926-பக்கம் 698 குறிப்பு)