உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 405 (உரையொடு சொல்) பொருளும் சொல்லும் தெரிந்த (சிவம்சக்தி. இவர்களின் உண்மை நிலை தெரிந்த) பிரமன் திருமால் உருத்திரன் என்னும் மூவர்க்கும் (அல்லது சம்பந்தர் : அப்பர் சுந்த்ரர் என்னும் மூவர்க்கும்), (ஒளி பெற) அவர்கள் கீர்த்தி ஒளி பெற (நற்பதங்கள்) சிறந்த எழுத்துக்களான ஐந்தெழுத்தை பஞ்சாசுரப் பொருளை உபதேசித்தும் அல்லது சிறந்த தெய்வப் பதவியை வகிக்கக் கற்பித்தும், தமது ஒரு பாகத்தில் பச்சைப் பெருமாட்டியாம் பார்வதியோடு அமைந்தும் - உலகெங்கும், கிடைக்கும் ( பலி) பிச்சையை ஏற்றுக்கொண்டு சென்றும், கடலில் எழுந்த் விஷத்தை உண்டு (தமது பரத்தை நிலை ಶ್ಗ பறந்து செல்லும் தன்மை வாய்ந்த திரிபுரங்களை எரிவித்தும் பொருந்தும்படிப் பாம்பை அரையிலே கட்டி அழகாக அமைத்தும் விளங்குகின்ற சடையின்மேல் தரித்துள்ள கங்கையுடனே (ஒக்க) ஒத்திருக்க அழகுபெற்று இல்ங்கும்படிப் பிறைச்சந்திரனை மேலே வைத்தும் -- *H அறுகையும், நொச்சியையும், தும்பையையும் மேலே சூடியுள்ளவரும், திருமால், பிரமன் இருவரும் நாள்தோறும் வந்து பெற்றவருமான அரன்' என்னும் நிர்மல மூர்த்தியாம் வனுக்கு நல்ல் உபதேசப் பொருளை உபதேசித்த பெருமாளே! (பாடற்கு வினவாதோ) 1167. நிமிர்ந்துள்ள முதுகும் குனிந்து, திகழ்ந்திருந்த முகமும் சுருக்கம் கண்டு நிறைந்து ஒழுங்காயிருந்த வயிறும் சரிதலுற்றுச் சரிந்து தடியை ஊன் றுவதாகி = நெகிழ்வுற்று உடலும் தளர்ச்சி யடைந்து, ஒளியுடன் இருந்த கன் அங்கு இருளடைந்து, நினைவுடன் இருந்த அறிவும் கலக்கம் உற்றதாகி மனையவள் (கண்டு) பார்த்துச் (சி என) உமிழ்ந்து பிறர் பலரும் வெடு வெடு என்று பேசி, சிறப்பாக இருந்த குன்த்தன்மையும் (பெயர்ந்து நீங்கலாகி (உடலிற் குடி கொன்டிருந்த்) உயிரும் (கழன்று) பிரிந்து விடும் நாள் (வருவதற்கு) முன்பாக

  • சிவபிரானுக்கு உபதேசித்து பாடல் 327

பக்கம் 314 கிழ்க்குறிப்பு