உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 443 தாமரையைப் பணிய, உனது அருள் வாய்த்த காரணத்தால், அழகிய குளிர்ந்த இவ்வுலகு (நோற்பவை) செய்த தவப்பயனாய் உதித்த அல்லது இவ்வுலகில் உன்னை நோக்கித் தவஞ்செய்திருந்த மென்மை வாய்ந்ததும், குங்குமம் கொண்டதுமான, குயாத்திரி (குய அத்திரி) கொங்கை மலைகளை உடையவளும், ஓயாத வகையில் எங்கும் (கலுழி) கான்யாறு ஒலித்து எழவும், எங்கும் வேத ஒலி பெருகவும் - விளங்கின வள்ளி மலைத் தினைப்புனத்தில் எங்கும் குருவிகளை (எச்சிய) கவண் கல் கொண்டு ஒட்டிய அழகிய மான் அனைய வள்ளியை என்றென்று நீ திரு என்றும், நீ மான் என்றும் காதல் மொழிகளைக் கூறி (அவசமாய்) தன் வசமழிந்து வணங்கி, (என்றும்) நாள்தோறும் (புதிய கூட்டமொடு) புதிதாகச் சந்திப்பது (கூடுவது) போன்ற மகிழ்ச்சியு டன், (என்றும்) தினமும், பொழுது போக்கின - காலம் கழித்த பெருமாளே! (பரங் குன்றம் பிறவும் வாழ்த் துவதொருநாளே) 1182. சண்டை செய்த கயல் மீன் போன்ற கண்களைப் புரட்டிக் காட்டுவர்; புளகாங்கிதம் கொண்ட கொங்கை மீதுள்ள (வடம்) மாலையை அசைத்துக் காட்டுவர். (புயலின்) மேகம் போன்ற (அளகமும்) கூந்தலையும் விரித்துக் காட்டுவர் பொதுமாதர் - (இவர் பின்னும்) சுத்தமான (இதழ்மது) வாயூறலாம் தேனைச் சிரிப்புடன் சாட்டுவர், பளபளப்புள்ள இடுப்பில் உள்ள ஆடையைக் கலைத்துக் காட்டுவர்; புதிதாய் அணிந்துள்ள காற் சிலம்புடன் நடனஞ் செய்து காட்டுவர் வாலிபர்களை (அவர்தம்) உள்ளம் உருகப் படுக்கையில் அணைத்துக் காட்டுவர்; அவர்களுடைய பொருட் செல்வம் - சொத்து முழுமையும் பறித்து அவர்களைத் தாழ்க்க - வறிஞராய்த் தாழும் படிச் செய்ய (உததி அமுதென) கடலினின்றும் தோன்றிய அமுதம் போல (நிகழ்த்தி) இனிமையுடன் பேசிப் (பொருளைக்) கேட்பார்கள், சொக்குப்பொடி - மாயப்பொடியை மணந்தார் - பாடல் 382, 435-பக்கம் 464, 590, பாடல் 624-பக்கம் 450; பாடல் 703-பக்கம் 120 கீழ்க்குறிப்புக்களைப் பார்க்க