உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 465 (ஆறு) காமம், குரோதம், உலோபம், மோகம்; மதம் மாற்சர்யம் எனப்படும் ஆறு வகைக் குணங்களும் நிறைந்தவர்களும், வாட்படை ஏந்தியவர்களுமான அரக்கர்கள் பொடிபட்டழிய வேலாயுதத்தைச் செலுத்தின ஆறுமுகப்பிரானே! குறத்தி வள்ளியின் மணவாளனே! கடலால் சூழப்பட்ட உலகு ஏழையும் அடக்கி (அல்லது) . கடல் ஏழு, உலகு ஏ இவைகளை அடக்கி, வாசுகிப் பாம்பின் ՃlIITaTվԼI సీ:: மயிலிலேறி விளங்கும் இளையவனே! (சிறுபட) கோபம் பிறந் து மேருமலையைக் (கிரவுஞ்சத்தைப் பொடிபடும்படிக் கோபித்தவனே சேவற் கொடியனே கடப்பமாலை நெருங்கும் திரண்டதோளனே - (சேரும் அடலால்) கூடியுள்ள வலிமையால் (வெற்றி) மிக்குள்ள சூரர்கள் கொண்டு போயடைத்த தேவர்களின் சிறையை மீளவிட்ட (மீள்வித்த) நீக்கின. பெருமாளே. (வரவேனும்) 1189. மின்னலைப் போல 經*醬 -ಣ್ಣ துடங்குகின்ற நுண்மை நுட்பம் வாய்ந்த (துசுப்பில்) இடையிலும், முத்துப் போன்ற வெண்மை நிறங் கொண்ட (நகையில்)பற்களிலும், வட்ட வடிவு கொண்டு அழகு நிாம்பி, (விம்மி) இளகி (நெகிழ்ந்து (ததித்த எழுந்து விளங்குகின்ற, (கொம்மை திரண்ட கொங்கையிலும், ( ಕ್ಲೆ? வளைவு கொண்ட (வில்) வில்லைப்போன்ற (நுதலில்) (புருவத்திலும்), அணிந்துள்ள பொட்டிலும், விலைம்ாதர்களுடைய கரும்புப் போல இனிக்கும் மொழியிலும், சிறப்புற்ற அன்னத்தின் நடைபோன்ற நடையிலும், கறுப்புநிறம் கொண்ட் 之醬 இணையில் - இரு கண்களிலும், சிற்ந்த க்ொவ்வைக் கனி போன்ற வாயிலும், (கண்ணழிவு) தனித்தனி ஆய்ந்து வியக்கும்.ஆராய்ச்சியிற். * என் புத்தி, அல்லது நோக்கம் செலுத்தி அழிந்த் என் புத்தி மாறி (உனது) ஆறு தி ங்களை நின்ைக்கும் படியாக ஏற்பட்ட எனது (கன்ம வசம்) நல்வினைப்பயனை புண்ணியப் பயனை) (நான் எப்படி மறக்கக்கூடும்) எந்த காரணத்தாலும் மறக்கமாட்டேன் - என்றபடி O இந்த நாலாவது அடி அருணகிரியாருடைய இளமையின் கீழ் நிலையையும் பின்னர் - புண்ணியப் பேறுகூடின அற்புத வரலாற்றையும் தெளிவு பெற விளக்கும் பகுதியாகும். இத்தகைய அருட்பேறு கச்சியப்ப முநிவர்க்கும் கிடைத்தது. (பாடல் -1207 குறிப்பு) 30