உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 முருகவேள் திருமுறை (7- திருமுறை வளரு மந்த ரச்சோலை மிசைசெ றிந்த முற்பாலை வனசர் கொம்பி னைத்தேடி யொருவேட வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில் மறவர் குன்றி னிற்போன பெருமாளே (240) 1231. பணிய தய்யனா தத்ததன தய்யனா தத்ததன தய்யனா தத்ததன தனதான t 5ள்ளt னச்சுறவு கொள்ளுமீ னற்பெரிய கல்விவீ றக்கரிய மனமாகுங்.

  • வேட வடிவு கொண்டு பித்தாகி - கோதைப் பித்தாய் ஒரு வேடுவ ரூபைப்பெற்றே" - திருப்புகழ். 980,

1 தன்னுடைய ஆற்றலால் தந்திரத்தால் சுறாமீன் - பிற மீன்களை உண்ணும். அதுபோலத் தனது கல்விஞான ஆற்றலாலும் தந்திரத்தாலும் பல புலவர்களை ஒரு அறிஞன் வெல்வான் கல்விஞானத்தின் பெருமையை யமுனைத் துறைவருடைய சரித்திரம் விளக்கும். சிறுகுழந்தையாகிய யமுனாரியர் வித்வஜன கோலாகலன்" என்னும் மகா பண்டிதனை ராஜ சபையில் நாம் - "ஆம்" - என்கின்ற மூன்று கேள்வியை மாத்திரம் - அல்ல" என்று மறுப்பீரானால் நம்மை ஜெயித்ததாக ஒப்புக்கொள்ளுகிறோம்" என்றார். மகா பண்டிதனும் நன்று என்றான். முதற் கேள்வி: "ஐயா! உமது தாய் புத்ரவதி" என்கிறோம். இதை உமது வாக்கு வல்லமையால் மறுத்து உரையும் என்றார். இரண்டாவது கேள்வி: இந்த அரசன் தர்மவான் என்கிறோம் - இதை மறுத்துரையும் பார்க்கலாம் என்றார்: மூன்றாவது கேள்வி - இந்த ராஜ பத்தினி பதிவிரதை என்கிறோம். இதை மறுத்துரையும் என்றார், மகா பண்டிதன் என் தாயை நான் எப்படி புத்ரவதி அன்று என்று நிலைநிறுத்தக்கூடும்; அரசன் எதிரில் அவன் தர்மவான் அன்று என்றும், அரச பத்தினி பதிவிரதை அன்று என்றும் எப்படி நான் வாதிக்கக்கூடும் என மயங்கி, விடைகூற மாட்டாது நான் தோற்றேன் என ஒப்புக்கொண்டான். அரசன் "சுவாமி தேவரீரே நீர் எழுப்பிய கேள்விகளில் நீர் உரைத்தவற்றை மறுத்துக் கூறுங்கள் பார்க்கலாம்" என்றார். யமுனைத் துறைவர் - (i) 'ஒரு பிள்ளையும் பிள்ளையல்ல ஒரு மரமும் தோப்பல்ல' என்ற பழமொழிப்படிஇப்பண்டிதரின்தாய்க்கு-வாழைஒருகுலைஈனுவதுபோல,இவர் ஒரேபிள்ளை ஆதலால்-இவர் தாய்வாழைமலடியாதலால்புத்திரவதியாகாள். (தொ.பக். 551)