பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/572

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 முருகவேள் திருமுறை 17- திருமுறை கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த குன்றம் பிளந்த கதிர்வேலா! *ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்பர் அங்கம் பொருந்து மழகோனே. அண்டந் தலங்க ளெங்குங் கலங்க அன்றஞ்ச லென்ற பெருமாளே (247) 1238. வினை அற தனதன தனத்த தத்த, தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்த தனதான சலமல மசுத்த மிக்க தசைகுருதி யத்தி மொய்த்த தடியுடல் தனக்கு ளுற்று மிகுமாயம். சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்தி தனிலுரு மிகுத்து சிக்க ளொடுதாரம், கலனணி துகிற்கள் I கற்பி னொடுகுல மனைத்து முற்றி கருவழி யவத்தி லுற்று மகிழ்வாகிக் கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்ற கடுவினை தனக்குள் நிற்ப தொழியாதோ: மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்து மழுவனல் கரத்துள் வைத்து மருவார்கள். மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்து மறைதொழ + நகைத்த அத்தர் பெருவாழ்வே, பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்ற படையது பொருப்பில் விட்ட முருகோனே. 青 இந்த ஏழாவது அடி அருமையானது மனப் பாடத்துக்கு உரியது. 1. கற்பு = கல்வி # சிரித்துத் திரிபுரம் எரித்தது - பாடல் 285-பக்கம் 206 குறிப்பு