உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/639

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை Ꮾ31 கொத்து முடியான பத்து - ராவணனது கொத்தாக இருந்த பத்து முடிகளும் - தலைகளும் அறுபட்டு விழவே குறிக்கொண்டு (அம்பு எய்த மிக்க கோபங் கொண்டவனான (அச்சுதன்) விஷ்ணு, மாயன் - மாயவன் ஆகிய திருமாலுடைய (மருகனே!) வீரம் வாய்ந்த மருகனே! குறக்குலத்து (கொச்சை) இழிவான வேட்டுவப் பெண் வள்ளியிடம் காம இச்சை காட்டும் பேச்சுக்களைப் பேசின நல்ல குமரேசனே! பத்தியுடனே (உன்னை) நினைந்து ஏத்தும் (போற்றும்) அடியார்களுடைய வினைப்பற்றைப் போக்கவல்ல சிறந்த வேதப் பொருளானவனே! பத்தி, வர ஞானம் - சிரேஷ்டமான ஞானம் இவைகளைக் கொண்ட சொற்களைக் கற்றவர்கள் (அல்லது பத்தி வருதற்கு ஞான சொற் கற்றவர்கள்) பாடுகின்ற நல்ல (பசுஷபத) அன்புக்கு உரியவனே! உரிய திருவடிகளை உடையவனே அல்லது அன்பு மொழிகளை உடையவனே தேவர்களின் பெருமாளே உண்மைப் பெருமாளே! (வாழ்வு சற்றருள்வாயே) 1273. 'முருகனே! மயிலேறும் பராக்ரமசாலியே சரவணபவனே! தினை விளைந்த (பூதரி) மலைப் பெண் வள்ளியின் அரும்புற்றதும், சந்தனம் அணிந்ததும், (கோமளம்) அழகுடையதுமான கொங்கையின் மேலே முழுகின ஆசைபூண்ட காமுகனே (காமம் கொண்டவனே!) (பதி) கடவு ள், (பசு) உயிர் - (பாசம்) தளை, கட்டு இவைகளின் (தீர் வினை) தீர்ந்த முடிவான கருத்தை உட்பொருளைப் பழைய (புராரிக்கு) திரிபுரம் எரித்த - சிவனுக்கு உபதேசித்த குருவே! என்று துதித்து மனம் உருகியும், ஆடியும், பாடியும், இரண்டு திருவடிகளை நாடியும், சூடியும், ஞான உணர்ச்சியுடன் பிணங்கியும் இணங்கியும் வழிபாடு செய்து உலகினருடைய பிரபஞ்ச ஆசைப்பாடுகள் அற்றுப்போக, நிலையான ஞானத்துடனே இனி உன்னுடைய அடியார்களுடன் சேரும்படியான பாக்கியத்தை அடையும் ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா!