பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630 முருகவேள் திருமுறை 17 - திருமுறை கொத்துமுடி யானபத் தற்றுவிழ வேகுறிப் புற்றஅதி கோபனச் சுதன்மாயன். கொற்றமரு காகுறக் கொச்சைமற மாதினுக் கிச்சைமொழி கூறுநற் குமரேசா; பத்தியுட னேநினைத் 'தெத்துமடி யார்வினைப் பற்றுவிடு மாமறைப் பொருளானாய். பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடு.நற் பகடிதபத தேவர்மெய்ப் பெருமாளே (282) 1273. அடியாரொடுகூட தனதன தானத் தானன, தனதன தானத் தானன தனதன தானத் தாணன தனதான முருகம யூரச் சேவக சரவண ஏனற் பூதரி முகுளப டீரக் கோமள முலைமீதே. முழுகிய காதற் காமுக பதிபசு பாசத் தீர்வினை tமுதியபு ராளிக் கோதிய குருவேயென், றுருகியு மாடிப் பாடிய மிருகழல் நாடிச் சூடியு முணர்வினொ டூடிக் கூடியும் வழிபாடுற். றுலகினொ ராசைப் பாடற நிலைபெறு ஞானத் தாலினி

  1. யுனதடி யாரைச் சேர்வது xமொருநாளே

“எத்தும் - ஏத்தும் t உபதேசித்தது :- (பதி, பசு, பாசத் தீர்வினை ஒதினது). சிவனுக்கு உபதேசித்தது - பாடல் 327-பக்கம் 314 குறிப்பு "தத்துவம் கேட்டலும் தனக்குத்தான் நிகளினான். தழங்கி நின்றாடினான்". தணிகைப்புரா - வீராட்ட - 118.

  1. அடியாரொடு கூடுதலின் இன்றியமையாமையைக் குறிக்கின்றது: இது ஒரு முக்கிய வேண்டுகோள்; "நமக்கு உண்டு கொலோ... திருமூலட்டானன். அடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே". அப்பர் 4.101-6.

X 1273 - பாடல் மனப்பாடம் செய்யத்தக்க பாடல்; முதல் நான்கடிகள் மிக உயர்ந்த பத்தி நிலையன.