பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 641 (விரை) நறுமணம் கொண்டுள்ள (அளகமுகிலும்) கூந்தலாம் மேகமும் - கருமேகம் போன்ற கூந்தலும், இளநகையும் புன்சிரிப்பும், ம்ருகமத கஸ்தூரி அணிந்த கன பெருத்த விசித்திரமான அதிசயிக்கத்தக்க (தனங்களும்) கொங்கைகளும் - தித்திப்புச் சுவை கொண்ட (தொண்டையும்) வாயூறலும், (அல்லது இன்பகரமான குரலும்), தாமரையன்ன - சுழிமடுவும் குழிந்துள்ள கொப்பூழ்த்தடமும் இடையும், (இவை யெலாம்) அழகு நிறைந்த மாதர்கள் தருகின்ற (கலவி) காமநுகர்ச்சியைச் (சுட்டி) குறித்து வேண்டித் திரிந்து இங்ங்ணம் (தட்டுப்படும்) தடைபடுகின்ற கொடிய (பங்கவாழ்வும்) இடர் நிறைந்த வாழ்க்கையும் முடிவே இல்லாத பிறப்பும் (அகல) ஒழிய, ஒப்பற்ற மவுன பரமசுகமதாம் பரிசுத்தப் பெரிய (பதம்) நிலை அல்லது திருவடி சித்திக்க (எனக்குக்) கிடைக்குமாறு அன்புடனே உனது திருவுள்ளம் சிந்தியாதோ - நினைக்காதோ! எழுத முடியாத ஆறுதிருமுகங்களும், அழகிய நெற்றியும், வயிரங்கள் இடையிட்டு - மத்தியில் வைக்கப்பெற்றுச் (சமைந்த) அமைந்துள்ள செவ்விய சுட்டி முதலிய கலன்களும் - ஆபரணங்களும், துங்க பரிசுத்தமான, நீண்ட (பன்னிரு) பன்னிரண்டு கருணை விழிமலர்களும், (இலகு) ஒளிவீசுகின்ற பதினிரு (10 + 2) பன்னிரண்டு குழைகளும் - குண்டலங்களும், ரத்னத்தாலாய (குதம்பையும்) காதணியும், (பத்மக் கரங்களும்) தாமரையன்ன திருக்கரங்களும், செம்பொன்னாலாய பூணுாலும் - "சொல்லிப் புகழத்தக்க (உடைமணியும்), அரைவடமும் - அரையிற் கட்டியுள்ள அரை நானும் அல்லது அரைச் சதங்கையும், திருவடியிணைகளும், முத்துக்களால் ஆயகிங்கிணியும், அழகிய மயிலும், செவ்விய திருக்கரத்தில் வேலாயுதமும் இவ்வாறு "மொழி புகழும் - உனது மொழியும், புகழும் அல்லது சொல்லப்படும் உனது புகழும் அல்லது. (மறை) மொழியைப் புகழ்ந்ததுபோல ஒலிக்கும் உடை மணியும் எனலுமாம் மறை..... சதங்கை கொஞ்சும் என்புழிப்போல (திருப்புகழ் 50)