பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/671

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 663 (a) பூளைப்பூ எருக்கு (மதி) நிலவு (நாகம்) பாம்பு இவைகளைப் பூண்டுள்ள பெருமான் ஈன்றருளிய குழந்தையே! (வேளை தனக்கு) உனக்கு வேண்டியிருந்த சமயத்துக்கு (உசிதமாகத் தக்கபடி தகுதியாக (சமயோசித்மாக்) வேழம் - யானையை (கணேசரை) வரவழைத்த பெருமாளே! (அநுபூதி ராசி தழைக்க அருள்வாயே) 1294. தினந்தோறும் (உற்று) பொருந்தி உன்னை நினைத்து மிகவும் விரும்பியும் நிஷ்டை நிலையை - தியானநிலையைப் பெற்று ஒழுகும் கருத்தமைந்த பெரியோர்களைத் துணையென (நத்தி) விரும்பியும், உத்தமமான சிறந்த தவ ஒழுக்கத்தை நான் பற்றுவதின் பயனாக இலக்கியத்தில் (பரதசாத்திரத்தில்) சொல்லியபடியும், |லக்கண (நிருத்த இலக்கணப் படியும்) உள்ள நிருத்தம் - உனது ருத்ததரிசனத்தை நீ எனக்கு அருள்புரிவாயாக (அல்லது) இலக்கிய இலக்கணங்களிற்கண்டுள்ளபடி (b) (நிருத்தம்) பற்றின்மை என்னும் பாக்கியத்தை அளித்தருளுவாயாக வெற்றியும், பராக்ரமும் கொண்டிருந்த அசுரர்களின் சுற்றத்தார் யாவரும் ( (ါံ ́) இறக்கும்படி வைத்த (நத்து கரனுக்கு சங்கம் ஏந்திய திருக்கரங்களை உயிடL திருமா லுக்கு s ற்றம் என்பதே இல்லாத பெரியோர்களின் உள்ளத்தில். மனத்திலே விளங்குபவனே! - கோழிக் கொடியை ஏந்திய பெருமாளே! (நிருத்தம் அருள்வாயே) 1295. நீல நிறத்தைக் கொண்ட மேகம் போன்ற மயில் மேலே எனவும் பொருள் காணலாம். "பக்தர்கள் பாடுவர் ஆடுவர்" - "பாடி யாடிப் பரவுவார்" பாடியாடும் மெய்ப்பத்தர்கட்கருள் செய்யும் முத்தினை' சம்ப. I-28-7, 2-109-9.

  1. அறுபகை செற் றைம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத் துள்ளிருக்கும் புராணர்". சம்ப 1-132-6.

(a) பூளை பாட்டு 273-பக் 181 குறிப்பு. (b) "நீருத்த சுக சிற் கனத்து நிலை" சிவ . தரு - சனண 96