உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திரு ப்புகழ் உரை ᏮᏮ9 உன்னுடைய திருவடித் தரிசனப் பேற்றைத் தந்தருளுக ஆறு சமய சாத்திரங்களுக்கும் பொருளாய் விளங்குபவனே! அறிவின் உட்பொருளை அறிபவர்களாம் பெரியோருக்குக் குணக்கடலாய் (அல்லது) பெரியோரின் குணக்கடலில் விளங்கு பவனே! பெரியோர்க்கு (உண) அனுபவிக்கக் கடல்போன்ற பெரியவனே! அகத்திய முநிவர் துதிக்கும் முத்தமிழ்ப் பெருமானே! குமரகுரு எனும் பெயர்ப் பெருமாளே! கார்த்திகை (மாதர். களுக்கு இனிய) பெருமாளே! (உனது பத காட்சியைத் தருவாயே) 1299. புத்தகங்களிலும் ஏட்டிலும் எழுத முடியாத (பொருளை) (பொற்பு உற) அழகு பொருந்தக் கூட்டுவித்துக் காட்டியும், அருள் மயமாம் ஞான (வித்தகப் பேற்றை) நன்மைப் பேற்றினை (பாக்கியத்தைத் தேற்றி) தேற்றுவித்து தெளியவைத்து உனது திருவருளால் பக்குவமாக எனக்கு-அதைக் (கூட்டி) கூட்டி வைத்தும் என்னைப் பாதுகாக்க நினைத்தருள வேண்டுகின்றேன். (தத்தை) கிளிகளை புக்கு ஒட்டி - அவை திணைப்புனத்தில் இருக்கும் இடங்களிற் சென்று (a) ஒட்டி (ஆயால் ஒட்டி) அந்தத் தினைக் காட்டில் இருந்தவளாம் வள்ளியைச் (சற்கரித்து) உபசரித்து, ஏத்தி - புகழ்ந்து, கீர்த்தி பெறுவோனே - பேரும் புகழும் பெற்றவனே! "கந்தன்தனை நீர்போற்றிய கடனால் இவன் உங்கள் மைந்தன் எனும் பெயராகுக மகிழ்வாய் எவரேனும் நூந்தம்பக லிடையின்னவன் நோன்தாள்வழி படுவோர் தந்தங்குறை முடித்தே பரந்தனை நல்குவம் என்றான்" - இது சிவபிரான் தந்த வரம் - கந்த புரா. 1-13.30 o சற்களித்து உபசரித்து. * வள்ளியை உபசரித்து ஏத்திக் கீர்த்தி பெற்றனர் முருகவேள். அடியார்க்கு எளியராய் அமைந்து தானேவந்து வள்ளியை மணம் புரிந்தாராதலின் பாடல் 253 அடி 5 பக்கம் 133 குறிப்பு (a) இது முருகர் ஆயால் ஒட்டினதையும் குறிக்கும் - திருப் 768, 902