உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/678

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 முருகவேள் திருமுறை (7- திருமுறை கைத்தலத் தீக்குப் பார்த்து நுழையாத tகற்பகத் தோப்புக் காத்த பெருமாளே (309) 1300. விரும்ப தன்ன தனந்தன தனதான பொன்னை விரும்பிய பொதுமாதர். புன்மை விரும்பியெ தடுமாறும்; என்னை விரும்பி#நி யொருகால் xநின். எண்ணி விரும்பவு மருள்வாயே o மின்னை விரும்பிய சடையாளர். -மெய்யின் விரும்பிய குருநாதா, # அன்னை விரும்பிய குறமானை. அண்மி விரும்பிய பெருமாளே. (310) கைத்தலத்து ஈ குப்பு = தும்பி வண்டுக் கூட்டம், குப்பு = கும்பு. இதனால் கற்பகத் தோப்பில் ஈ - தும்பி வண்டுகள் நுழையா என்பது பெறப்பட்டது. 1. கற்பகம் - வேண்டிய பொருளைக் கொடுக்கும். கற்பகத் தோப்பு என்றார் கற்பகக் கானம்' - சிந்தாமணி 2997 கற்பகங்கள் பத்து வகையனவாம்: (1) மத்தி யாங்கம் - இது திவ்ய ஸாரமாகிய நானாவித பானங்களைத் தரும். (2) துரியாங்கம் - இது நானாவித வாத்தியங்களைத் தரும்; (3) பூஷணாங்கம் - இது அனேகவித ஆபரணங்களைத் தரும், (4) மாலியாங்கம் - அநேகவித மாலைகளைத் தரும் (5) தீபாங்கம் - அது அனேகவித ரத்ன தீபங்களைத் தரும் (6)கிருகாங்கம் - இது பிரளயாத மண்டபாதிகளைத் தரும் (7) சோதிராங்கம் - இது சந்திராதித்தர் ஒளியினை அடக்கும் ஒளியினைத் தரும் (8) போசனாங்கம் - இது நானாவித ரஸத்தனவாகிய நான்கு வகை உணவினைத் தரும். (9) பாசனாங்கம் - இது வேண்டிய கலங்களைத் தரும் (10) வஸ்திராங்கம் - இது விசித்திர வஸ்திரங்களைத் தரும். இது பூ புராணத்திற் கண்டது - சிந்தாமணி 2997-பக்கம் 870 கீழ்க்குறிப்பு. "கற்பகக் காட்டுவளர் கடவுள்மா"- மீனாட்சி பிள்ளை முத் 7 # நி = நீ, Xநின் எண்ணி = நின்னை யெண்ணி, மின்போலும் சடை - மின்னார் சடை. சம்பந்தர். 197-4. * சிவபெருமான் தன் பிள்ளையிடம் பிரணவத்தின் பொருளைக் கேட்க விரும்பினர் - என்பது . "காமரு குமரன் சென்னி கதுமென உயிர்த்துச் செக்கர்த் தாமரை புரையுங் கையால் தழுவியே அயனுந் தேற்றா