உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/679

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் £»_GNDJ 67.1 கைத்தலத்து ஈ - தும்பி வண்டுகளின் (கும்பு) குப்பு. ஆர்த்து ஒலிசெய்து நுழைய முடியாத கற்பக விருகூடித் தோப்பு உள்ள பொன்னுலகைக் காத்த பெருமாளே. (காக்க நினைவாயே) 1300. பொன்னையே நாடி விரும்புகின்ற பொது மாதர்களின் இழிவான குணத்தை விரும்பித் தடுமாறுகின்ற என்னை விரும்பி நீ ஒருமுறையேனும் (நின்) உன்னை எண்ணி (தியானித்து) (நான்) விரும்புமாறு அருள்புரிவாயாக மின்னல்போல ஒளி வீசும் சடைப் பெருமான் (மெய்யின்) உண்மைப் பொருளை விரும்பி நிற்க அவருக்கு உபதேசித்த குருநாதனே (அல்லது உண்மையாகவே விரும்பி ஏத்தின குருநாதனே) (அன்னை) எனது தாய், நீ விரும்பின ஆசைப்பட்ட குறமான் வள்ளியை (அல்லது அன்னை - உமையம்மை விரும்பிய வள்ளியை) ( அண்மிリ நெருங்கி விருப்பம்கொண்ட பெருமாளே! (நின்னை எண்ணி விரும்பவும் அருள்வாயே) ஒமென உரைக்குஞ் சொல்லின் உறுபொருள் உனக்குப் போமோ போமெனில் அதன்ை யின்னே புகலென இறைவன் சொற்றான்" - கந்தபுரா. 1-17-37 முருகன் பொருள் விரிக்கக் கேட்டுச் சிவபிரான் -"தத்துவங்கேட்டலும் தனக்குத் தான் நிகளினான் தழங்கி நின்றாடினான்". தணிகைப் புரா. வீராட்ட 118 11 அன்னை - வள்ளியைத்தனது தாய் என்பர் அருணகிரியார். (). "என்னுடையதாய். கடம்பாடுகுழல் அன்னை. வள்ளி" - பாடல் 619 எனதாயி வளி நாயகி - பாடல் 644 என்றனொரு தாய். குற மங்கை" - பாடல் 833. (ii). அன்னை - பார்வதிக்கு உகந்தவள் வள்ளி என்பது: "பார்வதி யார்க்கும் இனித்த பெணாகிய மான் மகள்" திருப். 789