பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை (WWF) (ஞானச்சித்தி) ஞானம் சித்திக்க (கைகூட) வைப்பதும் (சித்திரம்) அழகுள்ளதும், நித்தம் - அழியாததுமான தமிழ் கொண்டு (முருகன், குமரன், குகன்) ஆதிய உனது பெயர்களைக் கற்றுப் புகழ்வதற்கு அருள்புரிவாயாக காட்டில் வசித்தவளும், (கொச்சைச் சொல்) திருந்தாத பேச்சை உடையவளுமான குறத்தி - வள்ளிக்குக் கடமைப்பட்டவனே! (கொற்றப் பொற்குல வெற்பைக்காதி) வெற்றி பெற்றிருந்ததும், பொன் மயமாயிருந்ததுமான கிரவுஞ்ச மலையைக் (காதி) கூறு செய்து, அதனுடன் (பொரும் வேலா) சண்டை செய்த வேலாயுதனே! (தேனை) வண்டுகளைத் (தத்தச் சுற்றிய) தாவிக் குதிக்கும்படி வைத்துச் சுற்றிய சுற்றி அணியப்பட்ட வெட்சி மாலையனே! தேவர்கள் வாழும் சொர்க்கத்தில் - பொன்னுலகில் விளங்கும் சக்ரவர்த்திப் பெருமாளே! (தமிழால் உன் நாமத்தைப் புகழ்கைக்குப் புரிவாயே) 1303 -1. குருபரனே சரவணபவனே! ஷண்முகனே! குகப் பெருமானே! ஒரு - ஒப்பற்ற, பர - மேலான, வயம்- வெற்றி, இயல் - பொருந்தியுள்ள, எயினர் மகள் - வேடர்மகள் - வள்ளியின் - சுகம் மண்டு இன்பம் நிறைந்துள்ள, அத்தனங்கள் - அந்தக் கொங்கைகளை அணைந்துள்ள, (சண்ட) - வலிமை பொருந்தியதும் திரண்டுள்ளதுமான திருப் புயங்களை உடையவனே உழுவைகள் புலிகள், கரடிகள், கிடிகள், -பன்றிகள், பகடுகள் - யானைகள் இவைகளெல். -ாம் இளை காவற் காடுகள், களை - களைந்து அழியும்படி, நெறு நெறு நெறு என்று முறியும் படி - உலவுகின்ற, விலங்கல் குறிஞ்சி - மலைகள் உள்ள மலை நிலத்தே வீற்றிருக்கும் (கடம்பனே!) மாலையாம் கடம்பு அணிந்தவனே! அருள் புரிவாயாக