பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

694 * திருப் புகழும் தெய்வங்களும் (சிவன்) 3. சிவபிரான் சிரசிற் குடுவன: கங்கை, பிறை, பாம்பு தேள், கொக்கிறகு தலைமாலை, கொன்றைமாலை 4. சிவபிரான் உடலில் அணிவன. ஆமைஒடு, பன்றியின் கொம்பு, எலும்புமாலை, புலியுரி, சிங்கஉரி, யானைஉரி, தும்பைமாலை, அரவாபரணம். 5. சிவபிரான் திருக்கரத்துள்ளன. சூலம், துடி, திருமாலின் குருதி நிரம்பிய பிரமகபாலம், மான், மழு, மணி, தி. 6. சிவபிரான் திருநாமங்களுள் அருமை வாய்ந்தன: ஆதிரையான், ஓநமச்சிவாயசாமி, கயிலைமலைக்கிழவன், கரதல கபாலி, கனக கார்முகாசாரி (கனகம் - பொன், கார் முகம் - வில், மேரு பொன் மலைவில்) காமாரி (காமனுக்குப் பகைவன்), காலகாலப்ரபு, சீதநாயகர், குருவிலாதவர், கொண்டல் பாகன் (கொண்டல் - திருமால்), சடைத்தம்பிரான், சதாசிவ கோத்திரன், சாதியிலாதவர், நாகக்காப்பன், பரதகுரு பினாகாயுதர், மழுவுழை கபால டமருக த்ரிகுல மணிகர விநோதர், முக்கட் சித்தர், விபூதி பூஷணர். 7. சிவபிரானது தன்மையும் திருவருளும் சிவபிரான் யார்க்கும் எட்டாதவர் பிரமனுக்கும் திருமாலுக்கும் எட்டாதவர்; ஆயினும் அடியார்களுக்கு நினைத்த மாத்திரையில் அருள் புரிபவர்; அன்பர் அகத்திற் குடிகொள்பவர்; மூவரையும் தத்தம் தொழிலில் நிறுத்திவைத்துள்ளவர் (787), அம் மூவருக்கும் குருமூர்த்தியா யுள்ளவர்; மூங்கிலடியில் தோன்றினவர் (திருநெல்வேலியிலும் திருப்பாசூர் என்னும் தலத்திலும்); வேதத்தைக் கோவணமாகக் கொண்டவர், வேதங்களுக்கு எட்டாதவர், சுடலைப்பொடியணிபவர், தமிழுக்கு உடையவர்; பிரமகபாலத்திற் பிச்சையேற்பவர்; சூரியனையும் சந்திரனையும் அக்கினியையும் மூன்று கண்களாகக் கொண்டவர்; திருநீறு அணிபவர், கணபதிதாதை முருகவேள் தந்தை திங்களுக்குத் தலையிடந் தந்தவர், விடையை வாகனமாகக் கொண்டவர், கயிலையை இருப்பிடமாகக் கொண்டவர். 8. சிவபராக்ரமம் தக்ஷயாகத்தில் வீரபத்திரரால் அக்கினியின் கை குறைக்கப்பட்டது, இந்திரன் குயில்வடிவு எடுத்தவனது சிறகு அரியப்பட்டது, சந்திரன் காலின்கீழ்த் தேய்க்கப்பட்டான், ஒரு சூரியனது பல் தகர்க்கப்பட்டது, ஒரு