பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/706

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698 திருப்புகழும் தெய்வங்களும் (பார்வதி) 15. சிவபிராற்குரிய துதிகள் வேறு எந்த நூல்களிலுங் காணுதற் கரிய அழகிய நிலையில் திருப்புகழிற் காணலாகும். இரண்டொரு உதாரணங்கள் இங்குக் குறிப்போம். 1. தொந்தத் தொகுகுட என்பக் கழலொலி பொங்கப் பரிபுர செம்பொற் பதமணி சுழற்றி நடமிடு நிருத்தர் அயன்முடி கரத்தர் அளிகளி யுரித்த கடவுள்; மெய் தொண்டர்க் கருள்பவர் வெந்தத் துகளணி கங்கைப் பணிமதி கொன்றைச் சடையினர் தொடுத்த மதனுரு பொடித்த விழியினர் மிகுத்த புரமதை எரித்த நகையின்ர் தும்பைத் தொடையினர் கண்டக் கறையினர் தொந்திக் கடவுளை தந்திட்டவர் (திருப்புகழ் 585) 2. பரதத்தை அடக்கி நடிப்பவர் த்ரிபுரத்தை யெளிக்க நகைப்பவர் பரவைக்குள் விடத்தை மிடற்றிடு பவர் தேர்கப் பரையுற்ற கரத்தர் மிகப்பகி ரதியுற்ற சிரத்தர் நிறுத்துயர் பரவத்தர் பொருப்பி லிருப்பவர் உமையாளர்: சுரர் சுத்தர் மனத்துறை வித்தகர் பணிபத்தர் பவத்தை யறுப்பவர் சுடலைப்பொடி யைப்பரி சிப்பவர் விடையேறும் துணை யொத்த பதத்தர் எதிர்த்திடு மதனைக்கடி முத்தர்.... (திருப்புகழ் 1177) மேற் காட்டிய அடிகளில் "வாக்குக் கருணகிரி" என்பதன் உண்மை எவ்வளவு தெளிவாக விளங்குகின்றது. சிவனைப் பற்றிய விஷயங்கள் அடங்கிய முக்கியமான 蠶 നെഞ്r്r: 18, 190, 211,340,387, 390,424, 451, 510,528, 562, 585, 745, 801, 878, 914, 983, 984, 1021, 1051, 1077, 1092, 1099, 1110, 1132, 1166, 1176, 1177, 1183, 1220, 1238,1259. 3. திருப்புகழும் பார்வதியும் திருப்புகழிலும் பிற நூல்களிலும் அருணகிரியார் பார்வதி தேவிக்கு மிகச் ്. ஸ்தானத்தைக் கொடுத்துள்ளார். தேவியின் பெருமையைத் தமிழ் மொழியில் முற்றுங் கற்று மகிழ விரும்புவோர் அருணகிரியார் தேவியைத் துதித்துக் கூறியுள்ள் பாசுர அடிகளையும், "அபிராமி அந்தாதி" என்னும் நூலையும் அவசியம் படிக்க வேண்டும். இனி, திருப்புகழாதிய அருணகிரியாரின் நூல்களிற் பார்வதியைப் பற்றி வருவன கூ றுவாம்.