பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் சிவனும் 697 ஏகரூபம். அத்தமன்று - பொன்னம்பலம், அத்தம் - பொன்) இறைவனாடும் பொழுது தேவி பாடுவதும் இவ்வடிகளிற் கூறப்பட்டுளது. அவர் ஆடும் பொழுது தேவி தாளம் ஒத்துவள் (1081); திருமால் கைத்தாளம் போடுவார் (1082) 12. திரிபுரத்தை எரித்தது, யானைத் தோலைப் போர்த்தது. காமனைப் பொடியாக்கியது ஆகிய இம் மூன்று பராக்கிரமங்களையும் - புரத்தார் வரத்தார். பொரத்தா னெதிர்த்தே வருபோது பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார் பொரித்தார் நுதற்பார் வையிலேபின் கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார். மதனாரைக் கரிக்கோல மிட்டார்" (திருப்புகழ் 424) என வெகு அழகாகவும், தெளிவாகவும், வேடிக்கையாகவும் அருணகிரியார் பாராட்டியுள்ளார். 13. சிவபிரானுக்குத் தலைமைத் தானத்தை стsйтят அருமையாக அருணகிரியார் அளித்துள்ளார் என்பது "தானே புணர்ந்து தானே அறிந்து தானே மகிழ்ந்து அருளுறித் தாய்போல் பரிந்த தேனோடுகந்து தானே தழைந்து சிவமாகித் தானே வளர்ந்து தானே இருந்த தார்வேனி எந்தை" (திருப்புகழ் 1220) "சகலமயம் பரமேச்சுரன்" ( HH 933) எனவரும் அழகிய அடிகளால் அறியக்கிடக்கின்றது. 14. சிவபிரானும் - தமக்குத் திருநீறு அளித்துத் தம்மை ஆட்கொண்டு, உய்யும் வகையை அருளினர் என்பதைத் தெளிவாக அருணகிரியார் எடுத்து ஒதுகின்றார். "கமழ்மா இதழ் சடையார் அடியேன் துயர்தீர்ந்திட வெண் தழல் மாபொடி அருள்வோர்" (திருப்புகழ் 568) 'எனை அடிமை கொண்ட சுவாமி சதாசிவ கடவுள் எந்தையர்" (திருப்புகழ் 856) 'எந்த னாவிக்குதவு சந்த்ர சேர்வைச் சடையர்" ( * 901) "அமுதமதை யருளி எமையாளும் எந்தை ( • 211) "எருக்கும் இதழியும் முடிக்கும் இறைகுரு எமக்கும் இறையவன்" (திருவகுப்பு 5)