பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 திருப்புகழும் தெய்வங்களும் (பார்வதி) நின்றவள்; தமிழைத் தந்த பழையவள், பொன் * (மேருவை) ஏந்தித் திரிபுரத்தை எரித்தவள் கூற்றை உதைத்தவள் (760), ஆலம் (விஷம்) உண்டவள்; அதனால் நீலகண்டம் உடையவள்; முக்கோணத் ", நவகோண சக்கரத்தில் அமைபவள்; (அடியார்களது) அலையைத் தடுத்து நிறுத்துபவள் கருதும் அன்பர்க்குச் சித் அளிப்பவள். င္တူ' நா நெல் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையுங் கச்சியில் வளர்த்தவள். தகப்பனாம் தக்கனைத் தண்டனை பெற வைத்தவள்; "தகப்பனை மழுக்கொடு வெட்டிய நிமலிகை" (748), வேதங்களால் துதிக்கப்பட்டவள். யுக முடிவில் உலகங்களைத் தமது உதரத்தில் (வயிற்றில்) அடக்குபவள்; சம்பந்தருக்குப் பாலமுது தந்தவள்; ஈறிலாதவள் (1213); ஆகம நூல்களுக்கு எட்டாதவள் (192), அரன், அரி அயன், அண் எட்டாதவள் (640); அயன், மால், அரன் மூவரும் ஒன்றதான .ே (365), பரத்தின் உச்சியில் நடம் நவில்பவள் (267) 7. திருமாலே தேவி: திருமாலே தேவி - தேவியே திருமால் என விளக்கப்பட்டுள்ளது. ஆதலால் தேவேந்திர சங்க வகுப்பில் இரணியனைச் சங்கரித்தது தேவி என்று பாராட்டப்பட்டுள்ளது. "பழைய சந்தத்தைப் பெற்ற மடப் பெண்" (458) 'திகிரி மேவுகையாள்" (525) 'அண்ட முண்ட நாரணி” (889) என வருவன காணலாம். அகர |్వ முதன்மையாக நின்று உயிர்களை ரகூதிக்கத் தேவியே அரியென விளங்குகின்றாள்" என்கின்றார். "அகரந் திரு உயிர் பண்புற அரி யென்பதுமாகி" (608) 8. தேவியும் அருணகிரியாரும்: தமது ஆணவம், மயக்கம், காமியம் இவைகளைத் தேவி அகற்றித் தனது பிறப்பை யொழித்து ஆண்டருளியதை அருணகிரியார் "ஆணவ மயக்கமுங்க(ல்)லி காமியம் அகற்றி என்றனை ஆள் உமை பரத்தி (647), "என் மாசு சேர் எழு பிறப்பையும் அறுத்த உமை" (439), எனை அருள் வைத்திட்டாண்டநாயகி (482) எனத் தெளிவுற விளக்கியும்; எனை ஈன அரசி - (543), "எனதுயிரெனுந்த்ரியம்பகி" எனது தாய்", "எனை யினசக்தி" (580) "எனையின மலை மாது" (644), "என் க(ண்)ணில் வளருஞ் சிவகாமி" (608) என அருமை யாகத் துதித்துமுள்ளார்.

  • ஒன்றெட்டுச் சக்ரதலப் பெண் - திருப் 456 ஒளிநின்ற கோணங்கள்

ஒன்பது மேவி உறைபவளே" - அபிராமி அந்தாதி.