பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/715

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் திருமாலும் 707 கஞ்சன் வஞ்சங்களைக் கடந்ததும், கா ளிங்க நிர்த்தனமும், குருந்தமேறிப் பெண்களொடு லீலை செய்ததும், அவர் தம் ஆடைகளைக் கவர்ந்ததும், மருதிடைத் தவழ்ந்ததும், சகடு உதைத்ததும், புவியுண்டதும், புல்லாங்குழல் ஊதிப் பசுக்களைக் காத்ததும், புல்லாங்குழல் ஊதும் ப்ரபாவமும், மலையைக் குடையாகப் பிடித்துப் பசுக்களைக் காத்ததும், மற்போர் செய்ததும், விளவெறிந்ததும், புள்ளின் வாப் கிண்ட தும், பாரி ஜாத விருகூத்தைப் பூமியிற் கொண்டு வந்ததும், உலக்கையை ராவி நடுக் கடலில் விட்டதும் கூறப்பட்டுள கிருஷ்ண லீலைகள் பலவற்றை வேல்வாங்கு வகுப்பின் ஈற்றடியிற் படித்து மகிழலாம். கண்ணபிரானது குழலோசையின் இனிமையையும், திறத்தையும் அருணகிரியார் சிறப்பித்ததுபோல வேறுயாரும் சிறப்பிக்கவில்லை என்றே கூறலாம்; அன்பர்கள் யாவரும் படித்து இன்புறத்தக்க தாதலின் இங்கு எடுத்துக் காட்டுவோம்: அளையில் உறைபுலி பெறுமக வயில்தரு பசுவின் நிரைமுலை யமுதுண: நிரைமகள் வசவ னொடு புலி முலை யுண: மலையுடன் உருகா நீள் அடவி தனிலுள உலவைகள் தளிர்விட மருள மதமொடு களிறுகள் பிடியுடன் அகல வெளியுயர் பறவைகள் நிலம்வர விரல்சேர் ஏழ் தொளைகள் விடு கழை விரல் முறை தடவிய இசைகள் பல பல தொனிதரு கருமுகில் சுருதி யுடையவன் நெடியவன் மனமகிழ் மருகோனே! (திருப். 60) (கண்ணபிரான் தமது புல்லாங்குழலில், விரல்களைத் தடவித்தடவிப் பலபல இசைகளை எழுப்ப, அந்தக் குழலோசையைக் கேட்டு மயங்கிப் புலிக்குட்டி பசுவின் மடியிற் பாலுண்டது. பசுவின் கன்று புலிமுலை யுண்டது; மலை உருகிற்று காட்டில் இருந்த மரங்கள் ர்கள் விட்டன; ஆண் யானைகள் காம வெறிகொண்டு பிடியுடன் அகன்றன; விண்ணில் இருந்த பறவைகள் நிலத்தே வந்தன) திருமாலின் நான்கு லீலைகள் (கஜேந்திர மோகூம், இரணியன் வதை மாபலியைச் சிறைவைத்தது, ராவணனைச் சங்கரித்தது) சீர்பாத வகுப்பின் ஈற்றடியிற் பின்வருமாறு ஒருசேரச் சிறப்பிக்கப்பட்டுள; அவை ஓத ஒத இன்பம் ஊட்டுவன: