பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/734

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726 திருப்புகழும் தெய்வங்களும் (வள்ளி) ஒது குறமான் வனத்தில் மேவியவள் கால் பிடித்துள் ஒமெனுபதேச வித்தொடணைவோனே." (790) எனவரும் இடத்துக் காணலாம். 'ஓம்' என் (என்கின்ற) உபதேச வித்து-இதுதான் சிவபிரானுக்கு உபதேசிக்கப் பட்டதாம். "சிவனார் தமக் குரிய உபதேச வித்தை யருள் திருவேரகத்தில் வரு பெருமாளே." (224) என்பது கவனிக்கற்பாலது உபதேச வித்தே ஞானவித்து "சுவாமி வெற்பில் ஞானவித்தை அருள் செய் தாதை கற்க வினவ ஒது வித்த பெருமாளே." என வருவதைக் காண்க (226) இத்துணைப் பெருமை வாய்ந்த வள்ளிபால் ஸ்பரிச தீகூைடிபெற்று, வினை மாளப் பெற்றார் அருணகிரியார் என்றால், அருணகிரியாரின் பெரும் பேற்றை என்னென்று கூறுவது எனதாயி வளிநாயகி (664) கடையேன் இருவினை நோய் மலம் மாண்டிட திண்டிய ஒண் சுகமோகினி வளி நாயகி. (568) 'இடர் கலிகள் பிணியோட எனையுமருள் குறமாது" (643) இங்ங்ணம் வள்ளிபால் தாம் பெற்ற பேற்றை நினைந்து மகிழ்ந்தே அருணகிரியார் தமது நூல்களில் வள்ளியின் பெருமையையே எடுத்தெடுத்துரைத்து மகிழ்கின்றார். ஆதலால் திருப்புகழ் "முருகன் புகழ் நூல்" மட்டும் அன்று: "வள்ளியின் திருப்புகழ் நூலுமாம்" என்று திடம்பட உரைக்கலாம். பாலப் பருவத்தில் முருகன் மறக்கருணை காட்டினன்; வள்ளியை மணந்த பின் முருகன் கருணை அறக்கருணையாய் மாறிற்று என்னும் கருத்தமைந்த பாடலைச் செப்பி இக்கட்டுரையை முடிப்போம். கருணைநிறை கடவுள்நீ என்றாலும் உன்கருணை ஓஹோ மறக்கருணையே கார்நிறச் சூரர்களை வேல்கொண்டு மாய்த்தனை கமலமலர் மேலயணையே