பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/735

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புகழும் வேலும் 727 பொருணிறைவு காண்கிலை என்றே புடைத்துப் புலம்பிடச் சிறையிலிட்டாய் புனக்கரும் பாகுமெம் வள்ளியை மணந்தபின் பூண்டனை அறக்கருணையை இருன்னிறையும் உள்ளம்உள கி ரர்.பொய் யாமொழிக் கின்பந் தனை யூட்டினை, எழிலிவடிவினன்எகினன் இந்திரன் சேடன்முதல் யாவர்க்கும் நற்றணிகையில் றைவு காட்டினை, அருணகிரி நாதரை ஆட்கொண்டு பாவ: 轟_ _ ■ அந்த அருள் தந்தனை செந்தமிழ்த் தெய்வமே! ஆயிகுற மான்மகினனே! 8. திருப்புகழும் வேலும் "அந்தமில் ஒளியின் சீரால் அறுமுகம் படைத்த பண்பால் எந்தைக னின்றும் வந்த இயற்கையாற் சத்தி யாம்பேர் தந்திடும் பனுவல் பெற்ற தன்மையால் தனிவேற் பெம்மான்! கந்தனே யென்ன நின்னைக் கண்டுளங் கவலை நீத்தோம்" (கந்தபுராணம் மூன்றாம்நாள் பா நுகோபன் - 212) என வீரவாகு தேவர் வேலாயுதத்தைப் போற்றினர். அருணகிரியார் யாது கூறுகின்றார் பார்ப்போம்: 1. வேலின் ஒளி () நூறுகோடிக் கணக்கான உதய சூரியர்களின் ஒளிக்கு நிகராகும் "உதய பாது சதகோடி உருவான ஒளிவாகு மயில்வேல்" (திருப். 207) (ii) சூரியன் பன்னிருவர் வடிவையும் உருக்கி வடிவெடுத்தாற் போன்ற மாசற்ற பேரோளியைக் கொண்டது வேல்: திவாகரர் வடிவை உருக்கி யெடுத்த திருக்கைவேல்" (பூதவேதாள வகுப்பு) (ii) சூரியனது வெய்ய ஒளியும், சந்திரனது தண்ணொளியும், வட்வ்ைத் தீயின் கடிய ஒளியும் வேலின் ஒளிக்கு முன் பயந்து ஒளிக்குந் தன்மையன. "சுடர்ப்பரிதி ஒளிப்ப, நில ஒழுக்குமதி ஒளிப்ப, அலை அடக்குதழல் ஒளிப்ப, ஒளிர் ஒளிப் பிரபை வீசும்" (வேல்வகுப்பு)