பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/736

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 திருப்புகழும் தெய்வங்களும் (வேல்) ஒளியின் காரணமாக - வேல் - கிரண அயில், சுடரயில், சோதிவேல், பாதுசத்தி, பிரபை அயில், மின் அயில், தடி(மின்) நிகர் அயில் - எனக் கூறப்பட்டுளது. 2. வேலின் அலங்காரமும் அழகும்: குஞ்சம், மணி முதலிய பொருந்தி அழகுடன் பொலியும் வேல் என்பது குஞ்சங் கட்டிய வேல்' மணிவேல்' மணிக்கதிர் வேல், கோமளகசத்தி, சிங்கார அயில் வேல்', 'சித்ர வடிவேல்' என வருவனவற்றால் தெரிகின்றது. 3. வேலின் உக்ரம்: சினவடிவு. தங்கியவேல், உக்ரவடிவேல், இடி முழங்கிய வேற்படை கால பாதுசத்தி - சண்டவிக்ரம வேல் - என வருவனற்றால் வேலின் உக்கிரம் புலப்படுகின்ற து. 4. வேலின் உருவம்: வேலின் உருவம் இன்னதென்பதை நெட்டிலைவேல், தாரை (கூர்மை) வேல், நெடுவேல், நீள் வேல் என வருவனவற்றால் அறிகின்றோம். 5. வேலின் குணம்: வஞ்சர்க்கு வஞ்சனை செய்யும், அடியார்க்கு உதவும், வார மதாம அடியார்க்கு வாரமாகி வஞ்சனை செய்வார்க் கென்றும் வஞ்சனாகும் சீர் அரசு என்று சிவபிரானை அப்பர் கூறியவாறு வேலும் வஞ்சர்க்கு வஞ்சனை செய்யும்; இது "வஞ்ச வேல்" எனத் திருப்புகழில் (750,773) வருவதால் அறியலாகும். 6. வேல் . மந்திரம்: தியானத்துக்குச் சிறந்தது வேல் மந்திரம் வேல், வேல் எனப் பெரியோர் பல்ர் தியானித்துப் பல சித்திகளை அடைந்திருக்கிறார்கள். இதனால் மந்த்ர் வேல் சித்திமன்னு செய்ய சத்தி, மெய்ஞ்ஞான அயில் சிவமஞ்செழுத்து - என்றெல்லாம் வேல் சிறப்பிக்கப்பட்டுளது. 7. வேலின் பஞ்ச கிருத்தியம்: கண்ணாடியில் தடம் கண்ட வேல் (908) - ஆதலின் தோற்றமும், வீரவாகு தேவரையும் நக்கீரரையும் காத்து அளித்த