உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 முருகவேள் திருமுறை (7- திருமுறை *வேதமொழி மெத்த வோதிவரு பத்தர் வேதனைத விர்க்கு முருகோனே. மேலசுர ரிட்ட தேவர்சிறை வெட்டி மீளவிடு வித்த பெருமாளே (36) 1031. காலனுார் புகுவோர் தான தான தானான தானத் தனதான t காதி மோதி வாதாடு நூல்கற் றிடுவோருங். # காசு தேடி யீயாமல் வாழப் பெறுவோரும், மாது பாகர் வாழ்வே யெனாநெக் குருகாரும். மாறி லாத மாகால னுார்புக் ваоapaитČU, xநாத ரூப o மாநாத ராகத் துறைவோனே. நாக லோக மீரேழு பாருக் குரியோனே. "வேத மொழி - திரு முருகாற்றுப் படை - எனக் கொள்ளலாம்; வேத மொழி சூட்டு கீரர்" . என்றார் 1278ஆம் திருப்புகழில் திருமுருகாற்றுப் படையை ஒதும் பக்தர்களுடைய வேதனைகளை முருகன் நீக்குவன் என்பதற்கு - "நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற்றுப்படையைத் தற்கோல நாடோறுஞ் சாற்றினால் - முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தானினைத்த எல்லாம் தரும்" - எனவரும் தனிப்பாடலும் சான்றாம். f வாதாடு நூல்கள் அருணகிரியார்க்கு அருவருப்பை உண்டாக்கும். - பாடல் 955 அடி 1-3 பார்க்க

  1. "ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே".

பட்டினத்தார் - ஏகம்ப. 21 "உள்ளபோதே கொடாதவர். வாழ்நாளை வீனுக்கு மாய்ப்பவரே"- கந்தரலங் - 53. X இறைவன் நாதரூபம்:-"ஓசைஒலியெலாம்.ஆனாய் நீயே". அப்பர். 6.38-1. 0 மா நாதர் ஆகத்து உறைவோன்:- சிவபிரானது மார்பில் தாவி ஏறி சடை முடியில் தவழ்பவன் முருகன் என்றார்." நாதர் மாதேவர் குழைய மாலிகா நாக மொடுதாவிக் குடில கோமளாகார சடில மோலி மீதேறு குமர" என்றார் திருப்புகழ் 1054ஆம் பாடலில். (தொடர்ச்சி பக்கம் 91)