உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெது திருப்புகழ் உரை 91 வேத மொழிகளை ---- அல்லது == வேத மொழி அனைய திருமுரு காற்றுப்படையை - நிரம்ப (ஓதி வரு) பாராயணம் செய்து வரும் பக்தர்களுடைய துன்பங்களை நீக்கும் முருகனே! முன்பு அசுரர்கள் தேவர்களுக்கு இட்ட சிறையை நீக்கி அவர்களை மீளும்படிக் காப்பாற்றி விடுவித்த பெருமாளே! (பிணி அணுகாதே. வாழவைத்து அருள்வாயே) 1031. (காதி) வெட்டுதல் போற் பேசியும், தாக்கியும், வாதம் செய்வத ற்குத் (தர்க்கம் செய்வதற்கு) உளதான நூல்களைக் கற்பவர்களும் - பொருளைத் தேடி (ஒருவருக்கும்) கொடாது வாழ்க்கை செலுத்துபவர்களும்; பார்வதிபாகராம் சிவபெருமானது செல்வமே என்று உனைப் புகழ்ந்து உள்ளம் உருகாதவர்களும் (மாறு இலாத) நீங்குதல் இல்லாது - (அல்லது நீதி மாறுதல் இலாத பெரிய யமபுரியிற் புகுந்து அலைச்சல் உறுவார்கள். (நாத ரூப) ஒலி உருவத்தவனே (மா நாதர்) பெரிய பெருமான் அடிகளாகிய சிவ பிரானது (ஆகத்து) உள்ளத்தில் இருப்பவனே! (அல்லது மாநாத ராகத்து - சிறந்த ஒலிகளை எழுப்பும் ராகங்களில் இசைப் பண்களில்-பொலிந்து விளங்குபவனே) சுவர்க்க லோகம் ஆதிய பதினாலுலகங்களுக்கும் (உரிமைக் காரனாய்) தலைவனாய் நிற்பவனே! ஆகம் உள்ளம் என்னும் பொருளில். ஆகத் தெழுகனல் கண்வழி யுக. கம்பரா - கரன் -97 சடைப் பரமர் சித்தத்தில் வைத்த கழலோனே' - திருப்புகழ் 306 மா நாத ராகத்து உறைபவன் - முருக வேள் இசைப் பிரியராதலில் ராகத்து உறைபவரானார் o - பாடல் 173. பக்கம் 400 கீழ்க்குறிப்பு X " ச்ரேழு பார் . பாடல் 170 அடி 8 பாடல் 1003 அடி 3. பார்க்க மேலுலகம் 7. பூலோகம், புவலோகம், சுவலோகம், சண்லோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம், கீழுலகம் 7. அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம்