உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை 106. பிரார்த்தனை துயர் அற கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன் உள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்தந் தெள்ளிக் கொழிக்குங் கடற்செந்தின் மேவிய சேவகனே வள்ளிக்கு வாய்த்தவ னேமயி லேறிய மாணிக்கமே. (அந்) ஒருகோடி..... மாணிக்கமே கொள்ளித்.... ஒழித்தருளாய். (பொ - உ) ஒருகோடி முத்தம் - ஒரு கோடிக்கணக் காண முத்துக்களைத் (தெள்ளிக் கொழிக்கும்) அலைவிசி ஒதுக்கும் கடல் சூழ்ந்த திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பராக்ரமசாலியே! வள்ளியம்மைக்குக் கணவனாய் வாய்ந்தவனே மயில் ஏறிய மாணிக்கமே கொள்ளியின் இடையே நெருப்பில் (அகப்பட்ட) எறும்புபோலத் துடித்து அழுகின்ற என் மனத்துயரை நீக்கி அருள் புரிவாயாக (சு - உ செந்தூர்ப் பெருமாளே வள்ளி நாயகனே மயில் வாகனனே! கொள்ளிவாய்ப்பட்ட எறும்புபோல என் மனம் குலைகின்றது.என் மனத்துயரை ஒழித்தருளுக (கு உ) இருபுறமும் நெருப்பு எரியும் ஒரு மூங்கிற் குழாயின் உள்ள்ே அகப்பட்ட் எறும்பு போல என்பர். இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து" திருவாசகம் நீத்தல் 9 முத்தம் கொழிக்கும் கடல் - முத்து பிறக்கும் இடங்களில் கடல் ஒன்று திருப்புகழ் - 764 பார்க்க குர சம்சாரம் செய்யச் செந்திலில் தேவசேனாபதியாய் வீற்றிருந்தபடியால் செந்தில் மேவிய சேவகனே என்றார். "மயிலேறிய மாணிக்கமே - பாடல் 39ம் பார்க்க 107. காலனுக்கு அஞ்சாமை சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங் காலன் தனக்கொரு காலுமஞ் சேன்கடல் மீதெழுந்த ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன் வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே. (அந்) கடல் ....... துணை....... சூலம் ...... அஞ்சேன்.