பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்கார ஆராய்ச்சி 107 வாக்கு ஸ்வாமிகள் வாக்குப் போலச் சிறந்ததா யிருப்பதால் அவர் செய்த தனிச் செய்யுள்களோ இவை என்னும் ஐயமும் நிகழ்கின்றது. இலைகுலாம் வேற்கரத் தெமதண்ணல் தம்மை ஆட்கொண்டு உபதேசித்தபிறகுதான் இந்நூலை ஸ்வாமிகள் பாடியிருத்தல் வேண்டுமென்பது. பேற்றைத் தவஞ்சற்று மில்லாத என்னைப் ப்ரபஞ்ச மென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்டவா" (1) வெறுந் தனியைத் தெளிய விளம்பியவா முகமாறுடைத் தேசிகனே" (8) "வள்ளிகோ னன்றெனக் குபதேசித்த தொன்றுண்டு" (9) "எல்லா மிழந்து சும்மா இருக்கும் எல்லையுட் செல்ல எனை விட்டவா (10) "அடியேன் செவி நீ யன்று கேட்கச் சொன்ன குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது" (24) "கந்தச் சுவாமி எனைத் தேற்றிய பின்னர்" (69) எனவருந் திருவாக்குக்களால் தெளிவாக மேலும், திருப்புகழிற் பல இடத்தும் "முருகா! யமன் கையிற் சிக்காது அடியேனை நீயே ஆண்டு கொண்டருள்" என இரக்கும் நமது ஸ்வாமிகள் கந்தரலங்காரத்தில் அவ்வாறு இரத்த்லோடு "நாம் ஆண்டவனுக்கு அடிமையாய் விட்டோம்: யமன் யாது செய்யக்கூடும்" என்னும் துணிபு பெற்றவராய், அப்பர் ஸ்வாமிகள் "நாமார்க்குங் குடியல்லோம் நமனையஞ்சோம்" எனக் கூறியவாறு, தாமும் பெருமாள் திருமுக மாறுங் கண்ட தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங் கெமராஜன் விட்ட கடையேடு வந்தினி யென் செய்யுமே" (87) "காலன் வெம்பி வந்திப்பெ ଈ୪୩ଈ୪T என் செய்யலாம். சத்தி வாளொன்றினாற் சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோப் த்ரிசூலத் தையே" (69) என முருகன் அடியார் பெருமையையும் தமது துணிவையுங் கூறினவராகி அமையாது, அக்காலனையே நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்' எனத் திருமூலர் உரைத்தாங்குத் தாமும்