பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 149 அசை, + (க உ) விண்ணுலக நன்மையை யொழித்து வந்த அசுரரைச் சமுத்திரத்தில் சங்கரித்து வென்ற குமாரக்கடவுள் பரமசிவனுக்கு உபதேசித்த பிரணவப் பொருளானது பதினாலுலகத்தினும் ஒரே தன்மையாய்ப் பொருந்தினது. (கு உ) அந்துதல் - பொருந்துதல், செவ்வந்தி" என்றார் 6ஆம் செய்யுளில் அந்தித்த மந்த்ரமென - திருப்புகழ் 157 ஓம் பிரணவப்பொருள் பதினாலுலகத்திலும் விரிந்து பொருந்தும் என்றார். அவ்விரிவை ஒமெனும் ஓங்காரத்துள்ளே உரு அரு "ஓங்காரத்துள்ளே உதித்த ஐம் பூதங்கள். உதித்த சராசரம்" - என வருமிடத்துங் காண்க. திருமந்திரம் 2676, 2677 முருகவேள் உபதேசித்தது-திருப்புகழ் 327, பக்கம் 314 கீழ்க்குறிப்பும் பார்க்க 5. திருவருள் கூடிடப் பிறவி ஒழிந்தது தித்தவித் தார மணித்தரைத் தேவர் வணங்கமுன்போ தித்தவித் தாரகை மைந்தர்செந் துார்க்கந்தர் சிந்துரவா தித்தவித் தார முடையா ரருள்வெள்ளந் தேக்கியன்பு தித்தவித் தாரந் தனிவீ டுறத்துக்கச் செவ்வணலே. (ப உ) தித்த வித்தாரம் - தித்தவென்னுந் தாளவிரினால், மன் நிலைபெற்ற, நித்தரை நடனமிடும் பரமசிவனுக்கு தேவர் அமரர்கள், வணங்க - வந்திக்கும்படியாக, முன் - முற்காலத்தில், போதித்த உபதேசித்தவராகிய, வி - விசேஷமான, தாரகை - கார்த்திகைப் பெண்களின், மைந்தர் - புதல்வரும், செந்தூர்க் கந்தர் -செந்திற்பதிவாழ் கந்தவேளும், சிந்துரம் - திலதத்தை ஆதித்த சூரியனைப்போலுடைய, வி - நல்ல, தாரமுடையார் - (வள்ளிதெய்வயானை யென்னுந்) தேவிகளையுடையவருமாகிய குமாரக்கடவுள், அருள்வெள்ளம் - தமது கிருபாநதியை, தேக்கி - என்னுள்ளத்து நிறைத்து, அன்பு - பக்தியை, உதித்து-தோற்றுவித்து, அவித்தார் தணித்தார், அம் அழகிய தனி ஒப்பற்ற, வீடு மோட்சம், உற அடையும்படி, துக்கம் - இடும்பையை (விளைக்கின்ற), செ - செனனமாகிய, அனல் - அக்கினியை (எறு) மைந்தர் முதலிய-எழுவாய்,அவித்தார். பயனிலை;ஏ-அசை