பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–T 150 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (க.உ) முற்காலத்தில் பரமசிவனுக் குபதேசித்தவரும் கார்த்திகேயரும், வள்ளிதெய்வானை பாகருமாகிய செந்துார்க் கந்தர் என்னுள் கருணை வெள்ளத்தை நிறைத்து, யான் கதியடையும் பொருட்டாகக் கொடிய அக்கினி போன்ற துன்பத்தை விளைக்கும் என் பிறப்பையொழித்தார். (கு.உ) தாரகை - "தாரா கணமெனுந் தாய்மார்" கந் அலங்-81 'ஒரு பூதரு மறியாத் தனிவீடு கந் அலங் 45 முருகவேளின் பொட்டும், பொட்டழகும் - பிறைத்துண்டம் இருமூன்று நிரைதோன்றப் பதித்தனைய புண்டரம் பூத்த நுதற் பொட்டழகும் (கந்தர் கலிவெண்பா 38), நுதலில் இட்ட பொட்டும், நுதற்பொலி பொட்டொடு வட்டச்சுட்டி பதிந்தாட (முத்துப் பிள்ளைத் தமிழ் செங்கீரை-1,6) 6. பொழுது கண்டு மயங்கல் செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற் செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய்திங்கட் சேய்புனைந்த செவ்வந்நி நீலத் தொருபாகர் போன்ற திணிச்சிந்தியார் செவ்வந்தி நீலத்தி னிடுமுற் றாத திமிரமுமே. (ப-உ)செவ்வந்தி-செவ்வந்தியென்னும் பூமாலை-யையும்,நீலம்கருங்குவளை மாலையையும் (புனைந்திடும்) புயம் - புயங்களையுடைய, முருகா - முருகக்கடவுளே! பத்தர் - அன்பரது, சித்தமெய்யில் இருதய உண்மை நிலையில், செவ்வு-செம்மையாக, அந்தி பொருந்தியிருக்கின்ற, நீ நீ, லத்தையுற்று - கிருபை கூர்ந்து, அருள்வாய் - (அம்மாலையை) எனக்குத் தந்தருளவேண்டும்,திங்கட்சேய்-குழவித் திங்களை, புனைந்தஅணிந்த செவ்வந்தி-சிவந்த மாலைக்காலமானது, நீலத் தொருபாகர் - நீல நிறத்தையுடைய பார்வதி பங்கரை, போன்றது - போலத் தோன்றி விளங்குகின்றது; இனி - இனி மேல், சிந்தியார் - உன்னைத் தியானியாதவர்கள் (அடையும்) செ - செனனமாகிய, வந்தி வருத்தத்தை (விளைக்கும்), நீலத்தின் - அஞ்ஞான இருளைப்போல, நீடும் - நீடித்து நிற்கும், முற்றாத தொலையாத, திமிரமும் இருட்டும். (எ று) நீ எழுவாய்,அருள்வாய்-பயனிலை;ஏ அசை (க.உ) செவ்வந்தி நீலோற்பல மாலிகையணியு முருகா! பரமசிவனைப்போல இளம்பிறையுஞ் செவ்வாணமுந் தோன்றிய