பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 151 மாலைக்காலமும், உன்னை நினையார் அடையுஞ் செனன விருளைப் போல இருட்டும் வந்தது. அன்பரது சித்தத்தில் வீற்றிருக்கின்ற நீ கருணையுற்று அம்மாலையை எனக்கருள வேண்டும். (கு.உ) பொழுது கண்டு மயங்கல்" என்னுந் துறை . (திருக்கோவையார் 188) பொழுது கண்டு மயங்கல் என்பது கதிரவன் மறைந்தான்; இனி யான் ஆற்றுமா றென்னோ என மாலைப் பொழுது கண்டு மயங்கா நிற்றல் மயல்தரு மாலை வருவது கண்டு, கயல்தரு கண்ணி கவலையுற்றது; அந்திப் பொழுதைக் கண்டு தலைவி ஆற்றாது வருந்துதல் - செவ்வந்தி மாலையினை.ஈண்டு வரவிட்டதார் பின்னும் செப்புகவே" - கோடீச்சுரக் கோவை 151 முருகபிரான் அணியும் மலர்களுள் செவ்வந்தி - சாமந்தியும் நீலோற்பலமும் கூறப்பட்டுள. செவ்வந்தித் தாமா-திருவாரூர் உலா 339 லத்தை- கிருபை-கந்அந்38.அந்தித்தல்-பொருந்துதல் (செய்யுள் 4-ன் குறிப் புரை) --- 7. விரகதாபம் திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல் திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந் திமிரத் திமிரத் தனையாவி யாளுமென் சேவகனே திமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே. (ப உ) திமிர இருணிறத்ததும், திமி - திமிங்கல மீனை, ரக்க - இரட்சிப்பதுமாகிய, தரங்கம் - சமுத்திரத்தை கோப கோபித்தவனே! செவ் - சிவந்த வேல வேலாயுதத்தையுடையானே கை வேல் - கையின் வேலாயுதமும், திமிர திமிராகும்படி, திமி-குற்றுகின்ற,ரக்க குலாந்தகஅசுரர் குலத்துக்கு யமனே வரைத்தேன் பெருகு-மலையினின்று விழுந் தேனாற் பெருகிய, உந்தி மிர் - கான் யாற்றையுடைய புனத்தில் வாழும் வள்ளி நாயகி, அத்தி மிர் - அயிராவதத்தால் வளர்க்கப்பட்ட தெய்வயானை நாயகி, அத்தனை அவ்வளவு, ஆவி-(என்) பிராணனை, ஆளும் ஆண்டு கொள்ளுங்கள், என - என்றிங்கிதம் பேசும், சேவகனே - வீரனே திமிரத் திமிர - பூசப் பூச, கனலாய - அக்கினிபோ லிருக்கின்றன, சந்தன சீதளம் - (யான் திமிர்ந்திருக்கின்ற சந்தன முதலிய குளிர்ந்த வஸ்துக்களும், (ஆதலால் வந்து தழுவி யருளவேண்டும்) (எ று) தரங்க கோப முதலியன - எழுவாய் -