பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 153 தெரியாது அந்த மங்கை வேதனைப்படுகின்றாள்; பின்வருமாறு அவள் புலம்பவும் கூடும். மங்கை குறத்தி வலப்பால் இடத்தை வளைந்துகொண்டாள் நங்கை கரிப்பெண் இடப்பால் இடத்தை நயந்தணைந்தாள் இங்கிம் மடந்தையை எங்கே இருத்திவைப் பேனெனநீ அங்கொர் வழியின்றி யோனனைத் தூர அகற்றினையே. "சந்தனத்தைப் பூசுமுலை தைவரலும் நெஞ்சழுங்கி இந்தனத்தை நீற்றுநெருப பீதென்றாள்" -தணிகையுலா 410-மங்கைப் பருவம். 8. வள்ளியாற் கிடைத்த சீதனப் பொருள்கள் சீதனங் கோடு புயங்கைகொண் டார்.தந் திருமருக சீதனங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோ சீதனங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ் சீதனங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே, (ப-உ) சீ - மகா லகூழ்மியினது, தனம் - கொங்கையையும், கோடு - சங்கத்தையும், புயம் - திருத் தோளிலும், கை - திருக்கரத்திலும், கொண்டார்தம் - தரித்த விஷ்ணுவினது, திருமருக சிறந்த மருகனும், சீதன் சந்திரனை அம் அழகிய, கோடு கோணல் வடிவாகத் (தரித்த, முடியாளர் - பரமசிவன், சேய் தனக்கு - மைந்தனுமாகிய குமாரக் கடவுளுக்கு ஏதுளதோ - உள்ளதென்னெனில், சீ- இகழத் தக்க, தனம் - திரவியம், கோள் - குற்றத்தையும், துனி - துன்பத்தையும், தரு - கொடுக்கத்தக்கது, என்பார் - என்று நீக்கிய அன்பர்கள், தொழும் . வணங்குகின்ற, தேவி - வள்ளி நாயகியால் பெறுஞ் சீதனம் - கிடைத்த வரிசையாகிய, கோடு - கொம்பினோடு, கொடி - கோழிக் கொடியும், வேல் - வேலாயுதமும், மயூரம் - மயில் வாகனமும், சிலை - குறிஞ்சி நிலமாகிய மலைகளின்,அரசு-ஆளுகையுமாம். (எ-து) ஏதுளது - எழுவாய்; இவைகளுடைமையாம் - பயனிலை. ஏ அசை, (க உ) திருமாலுக்கு மருகோனும் பரமசிவனுக்கு மைந்தனுமான குமாரக்கடவுளுக்கு வள்ளிநாயகி சீதனத்தாற் பெற்ற கொம்புடன் கோழிக்கொடியும், வேலாயுதமும், மயில் வாகனமும் மலைகளின் ஆளுகையையும் உடைமைகளாம்.