பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 - முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை (கு உ) முருகவேள் வள்ளி மூலமாகப் பெற்ற சீதனப் பொருள்களைத் - "திண்ணென் தடக்கை வெஞ்சிலை வேடர் குடிகொண்ட சீறுாரும், ஊரூர்தொறும், செந்தினைப் புனமூடு தண்சாரல் பிறவுமாம் சீதனக் காணிபெற்றத் தண்ணென் குறிஞ்சித் தலந்தலையளிப்பவன் சப்பாணி கொட்டியருளே"-எனவரும் முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழிலும், வரைதரு பெண்ணை வேட்டு வரையெலாம் காணி கொண்ட விரைதரு கடப்பந் தண்டார் வேலவற் கன்பு செய்வாம்' - எனவரும் மண்ணிப் படிக் கரைப் புராணத்தும் காண்க. தேவசேனையின் சீதனப் பொருளை இடியு முனைமலி குலிசமும் இலகிடு கவள தவள விகடதட கனகட இபமும், இரணிய தரணியும் உடையதொர் தனியானைக் கிறைவ" - எனவரும் திருப்புகழில் (1008), பக்கம் 38-கிழ்குறிப்பிற் காண்க. ஆகவே வள்ளியாற் பெற்ற சீதனப் பொருள்கள் ஐந்து: (1) ஊதுகொம்பு, (2) சேவற்கொடி, (3) வேலாயுதம், (4) மயில்வாகனம், (5) மலையாட்சி: தேவசேனையாற் கிட்டியவை நான்கு - (1) இடி, (2) குலிசம், (3) ஐராவதம், (4) பொன்னுலகு தனத்தைப் (பொருளைச்) சீ என இகழ்ந்தார்க்கே வள்ளியின் திருவருள் கூடும். 9. விரக வேதனை: சிலைமத னம்படு மாெ றழுஞ் சேய்மயி லுச்சிட்டவெச் சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான் சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச் சிலைமத னம்படு தாமரை வாவி திரள்சங்கமே. (ப. உ. சிலை-கருப்பு வில்லையுடைய, மதன்-மன்மதனது அம்பு - புஷ்பபாணங்கள், அடுமாறு எழும்-கொல்லும்படி வருகின்றன, சேய் மயில் - குமாரக் கடவுளின் மயிலினது. உச்சிட்ட எச்சிலாகிய, பாம்பினது, எச்சிலை - எச்சிலாகிய தென்றற் காற்றையும், மதனம்படுகடையப்பட்ட சிந்துவை-சமுத்திரத்தையும், இந்துவை-சந்திரனையும், யான் செய்வதென் - நானென்ன செய்து கடப்பேன்; சிலை - ஆர்ப்பரிப்போடு, மதம் - ஆங்காரத்தை நம்படு - நம்மிடத்திலே, காட்டுவர் - அலர் துாற்றிக்காட்டா நின்றார்கள்; கேளிரும் - சுற்றத்தாரனைவரும், செங்கழுநீர் - குவளைமலர் நிறைந்த சிலை