பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 முருகவேள் திருமுறை 10 ஆம் திருமுறை அடு திறல் எயினர் சேரி அளித்திடு ரீaய எங்கள் மட தையைக் காவில் வெளவி, வரம் னை அழித்துத்திரா கெடு தனிப் பழிய தொன்று நிறுவினை. எனக் கூறினார்கள் வேடர்கள். (கந்த புராணம் 6-24-191) 18. பிறவி ஒழியும் வகை தினைவேத் தியன்புசெய் வேந்தன் பதாம்புயத் திற்பத்திபுந் தினைவேத் தியமுகந் தேற்றினர் மாற்றினர் பாற்றினந்தித் தினைவேத் தியர்நெறி செல்லாத விந்தியத் தித்தியினத் தினைவேத் தியங்குயிர் கூற்றாரி லூசிடுஞ் சீயுடம்பே. (ப உ) தினை திணைப்புனத்துக்கு ஏத்தி - இறைவியாகிய வள்ளிநாயகி, அன்புசெய் - இச்சைகொள்ளும், வேந்தன் . குமாரக் கடவுளது. பதாம்புயத்தில் திருவடித் தாமரையில், பத்தி-அன்பையும், புத்தி அறிவையும், நைவேத்தியம் - நைவேத்தியமாக, உகந்து விரும்பி, ஏற்றினர் (சமர்ப்பித்து) வணங்கின அடியார்கள், மாற்றினர் - (உண்மையாப்) ஒழித் து விட்டார்கள், பாற்றினம் - பருந்துக் கூட்டங்களும், தி நெருப்பும், தினை பட்சிக்கத் தக்கதும், ஐ - அழகிய, வேத்தியர் - அறிஞோர், நெறி (விதித்த) நல்வழியில், செல்லாத ஒழுகாததும், இந்திய பஞ்சேந்திரிய வசத்ததும், தித்தி யினத்தின் உணவு வகைகளினால், நைவு - கழிவாகிய (மலைசாதிகளை) ஏத்து . ஏந்திக்கொண்டதும், இயங்குயிர் (உண்ணின்று இயங்கும் பிராணனை, கூற்று யமனானவன், ஆரில் -உண்டு விட்டால், ஊசிடும்நாறிப்போகத் தக்கதுமாகிய, சீ . இகழ்ச்சிக்கு இடமான, உடம்பு - தேகத்தை (எறு)ஏற்றினர்- எழுவாய்; மாற்றினர்-பயனிலை.ஏஅசை (க உ) வள்ளிநாயகி விரும்பிய கந்தசுவாமியினது திருவடித் தாமரையில் அன்பையும் அறிவையும் செலுத்தினவர்கள் பருந்துக்குந் தீக்கும் இரையாய் நெறியொழி ஐம்புலனுகர்ச்சி. யையுடைய மலபாண்டமும் பிராணன் விட்டுப் பிரிந்தால் நாறிப்போவதுமாகிய உடலையொழித்துவிடுவார்கள். (கு உ) இந்தப் பாடலை வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் மானச பூசையில் நைவேத்தியத்துக்கு உபகரணமாகக் கொண்டனர். ஊசிடும் சீ உடம்பு - அழுகு திரி குரம்பை (கேஷத்திர வெண்பா ) பிறவியை ஒழிக்கும் வழியைக் காட்டுகின்றது.இச்செய்யுள்