பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 175 நற்றுணை நல்ல அநுக்கிரகத்தை சிக்கெனவே உறுதியாக (எறு) நீதோன்றா எழுவாய்.தேடிக் கொள்- பயனிலை ஏ-அசை (க - உ) நெஞ்சமே! L/[T+F தரனாகிய யமன் உன்னை நலிவு செய்யாதபடி பிரமாவைச் சிறைப்படுத்தி, இந்திரனைச் சிறை தவிர்த்து, சமணரிட்ட ஏட்டையும் வாதையுஞ்செயித்த குமாரக் கடவுளது துணையை உறுதியாகச் சம்பாதித்துக் கொள். (கு - உ) சமணரை - ஏட்டையிட்ட வாதத்தில் வென்றதைத் திருப்புகழ் 181-பக்கம் 422குறிப்பிற்காண்க 28. வேலைத் துதிக்க சிக்குறத் தத்தை வழங்கா திழந்து தியங்குவர்தே சிக்குறத் தத்தை வடிவே லெனார்சில ரன்பர்செந்தாள் சிக்குறத் தத்தை கடிந்தேனல் காக்குஞ் சிறுமிகுறிஞ் சிக்குறத் தத்தை யணகிலெப் போதுந் திகழ்புயனே. (ப.உ) சி-இகழ்தற்கிடமாகிய, குறு-குறைவுபடத்தக்க, அத்தத்தைபொருளை வழங்காது - நல்வழியிற் செலுத்தாமல், இழந்து பலவழியாயிழந்து, தியங்குவர் வருந்துவார்கள், தேசு (தங்களுடைய) கீர்த்தியும், இக்குற- மங்கிப் போகும்படியாய், தத்து பொங்கமுற்ற, ஐஅழகிய, வடிவேல் எனார் சிலர் கூரிய வேலாயுதமென்று துதியாத சிலபேர்கள், அன்பர் அவ்வேலைத் துதிக்கும் அடியார்கள், செந்தாள் - உனது செவ்விய திருவடியை, சிக்குற-அகலாதுறையக் கண்டும், தத்தை கடிந்து கிளியோட்டி, ஏனல் காக்கும் - திணைப்புனங் காக்கும் சிறுமி - சிறுமியாகிய, குறிஞ்சிக் குறத்து மலைநிலத்துக் குறவரிடம் வளர்ந்த அத் தையல் - அந்த வள்ளிநாயகியினது, நகில் கொங்கைச் சுவட்டால், எப்போதும் - சதாகாலமும், திகழ் புயனே பிரகாசிக்கின்ற புயத்தையுடைய குமாரக்கடவுளே. (எ-று) சிலர் எழுவாய். தியங்குவர் - பயனிலை (க உ) வள்ளிநாயகியினது கொங்கைச் சுவடு திகழும் புயத்தோனே! அன்புற்றவர்கள் உனது திருவடியில் அகலாது உறைதலைக் கண்டும் சிலர் உனது வேலாயுதத்தைத் துதியாமல் அநித்தியமான கைப்பொருளையும் இழந்து வறுமையால் வருந்துகின்றார்கள். - (கு.உ)வழங்காத செல்வம் பலவழியாய் இழக்கப்படும்; கொன்னே வழங்கான் பொருள் காத் திருப்பானேல் அஆ இழந்தானென் றெண்ணப்படும்: