பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை கொடாஅது வைத்தீட்டி னாழெப்பர். உய்த்தீட்டும் தேனீக் கரி - நாலடியார் - 1,9,10. நம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள் பம்புக்காம் பேய்க்காம் பரத்தையர்க்காம் - வம்புக்காம் கொள்ளைக்காம் கள்ளுக்காம் நோவுக்காம் சாவுக்காம் கள்ளக்காம் தீக்காகும் காண் - ஒளவையார். (2) ஈதலின் சிறப்பையும் வேலைத் தியானித்தலின் சிறப்பையும் அருணகிரியார் ஒன்றுபடுத்தியே கூறுவார்: கரவா திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய் கந்.அ து.7. காய்வேல் பாடேன்.தாழா தீயேன் - திருப்புகழ் 1062. ஏற்கு மவர்க்கிட என்னின் எங்கேனும் எழுந்திருப்பார் வேற்குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றே கந்.அலங்-66 வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும் பகி மின்காள் - கந்தர் அலங்காரம் 18. (3) வள்ளியின் கொங்கையை விடாத கரத்தர் முருகவேள் என்பதை - வேடுவச்சி இளமுலை விடாத சித்ர மணிமார்பா", 'வளிநாயகியை மா(ர்) முலை விடாத மணி மார்பா" - திருப்புகழ் 522, 644, 817. 29. சம்பந்தரே தெய்வம் திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ திகழு மலங்கற் பகஆர் செருத்தணி செப்பிவெண்பூ திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே. (ப உ) திகழும் - விளங்கா நின்ற, அலங்கல் - மாலையை யணிந்த கழல் தனது திருவடியை, பணிவார் - வணங்குவோர், சொற்படி செய்ய - திருவாக்கின்படி நடக்க, ஒதி - தமிழ் வேதமென்னுந் தேவாரத்தை மொழிந்தருளினவரும், கழுமலம் - தான் அவதாரஞ் செய்த சீகாழியையும், கற்பக ஆர்தான் காத்தருளிய கற்பகத் தருஆையுடைய அமராபதியையும், செருத்தணி - தான் உறையுங் திருத்தணியையும், செப்பி - துதிசெய்து, வெண்பூதி திருவெண்ணிறானது, கழும் போக்கடிக்கும், மலம் - மும்மலத்தையும், கற்பு - பரம்பொருளிதேயென்று நம்புங் கற்புடைமையை, அருளும்