பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரந்தாதி 185 37. முருகன் திருவடியையே மனத்திற் பற்றுக சீர்க்கை வனப்பு மலர்வேங்கை யானவன் செஞ்சிலையோர் சீர்க்கை வனப்பு னிதத்தவ வேடன் றிணைவளைக்குஞ் சீர்க்கை வனப்பு னமதுருக் காட்டிய சேய்தமிழ் நூற் சீர்க்கை வனப்பு னிமிர்சடை யோன்மகன் சிற்றடிக்கே (ப உ) சீர்க்கை - மனந் திருந்துதல், வனப்பு - அழகாகும், மலர் - புஷ்பங்களையுடைய, வேங்கையானவன் - வேங்கை மரமாய் நின்றவனும், செஞ்சிலையோர் - அழகிய வில்லையுடைய குறவர்கள், சீர் - சந்தேகப்பட்ட தன்மையை, கை - கேர்பித்து, வன - வனத்தில், புனித பரிசுத்தமான, தவவேடன் - தவ வேடங்கொண்டவனும், தினை வளைக்கும் . தினைப்புனத்தைக் காக்கின்ற, சீர்க்கு - சிறந்த வள்ளிநாயகிக்கு: ஐவனப் புனமது - மலைநெல் விளைகின்ற புனத்தின்கண், உருக்காட்டிய சேய் தன் நிசரூபத்தைக் காட்டிய குமரனும், தமிழ்நூற் சீர்க்கு-இயற்றமிழ் நூலுக்குரிய முப்பது சீருக்கும், ஐ - புலவனாகிய தேவனும், வன - கங்கையையும், புல் அறுகையும் அணிந்த நிமிர் நீண்ட சடையோன் - சடாபாரத்தையுடைய பரம சிவனது, மகன் - மைந்தனுமாகிய முருகக்கடவுளினது, சிற்றடிக்கு-சிறிய திருவடித்தாமரைகளை யடைதற்கே, (எறு.) சீர்க்கை-எழுவாய், வனப்பு-பயனிலை ஏ-அசை (க உ. வேங்கைமரமாய் நின்றவனும், திணைப்புனத்தில் சத்தேகித்த சந்தேகத்தைக் குறவர் விடும்படி தவவேடங்கொண்டவனும், வள்ளிநாயகிக்குத் தன் நிசருபத்தைக் காண்பித்தவனும், இயற்றமிழ்ப் புலமையையுடையவனும், பரமசிவன து மைந்தனுமாகிய குமாரக்கடவுளின் திருவடியையடைதலே அழகாகும் (கு உ) (1) வேடுவர்கள் ஐயுறுவர் என்பதற்கு வெந்திறல்கொள் வேடுவர்கள் வெய்யர் இவண் நில்லா துய்ந்திட நினைந்து கடி தோடும் இனி என்றாள்.