பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை கைதொழுது நிற்றல் கடனன்று கானவரிச் செய்கைதனை அறியின் தீதாய் முடிந்திடுமே எனவரும் பாடல்களையும், முருகவேள் தனது நிஜருபத்தை வள்ளிக்குக் காட்டினர் என்பதற்கு கன்னி தனையோர் கடிகா வினிற் கலந்து துன்னு கருணைசெய்து தொல்லுருவங் காட்டினனே, முந்நான்கு தோளும் முகங்களோர் மூவிரண்டும் கொன்னார்வை வேலும் குலிசமுமே னைப்படையும் பொன்னார் மணிமயிலு மாகப் புனக்கு வர் மின்னாள்கண் காண வெளிநின் றனல் விறலோன் எனவரும் பாடல்களையும் காண்க. (கந்த புராணம் 6-2493,107, 115,116) (2) முருகன் இயற்றமிழ் நூலுக்கு உரிய முப்பது சீருக்கும் தலைவன்; முப்பது சீராவன: ஒர் அசைச்சீர் (நாள், மலர்)2 ஆசிரிய உரிச்சீர்-தேமா, புளிமா,கருவிளம், கூவிளம்-4 வெண்பா உரிச்சீர் - தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய் 4 வஞ்சிக்கு உரிச்சீர் - தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி-4 பொதுச்சீர் - தேமாந்தண்பூ புளிமாந்தண்பூ கருவிளந்தண்பூ கூவிளந்தண்பூ தேமாநறும்பூ புளிமாநறும்பூ கருவிளநறும்பூ கூவிளநறும்பூ தேமாந்தண்ணிழல், புளி மாந்தண்ணிழல், கருவிளந்தண்ணிழல், கூவிளந்தண்ணிழல்; தேமாநறுநிழல், புளிமாநறுநிழல், கருவிளநறுநிழல், கூவிளநறுநிழல்; ஆக 24.4416 சீர் 30. 38. முருகனது நீலோற்பல மாலை வருத்துவது சிற்றம் பலத்தை யரன்புநெய் நூற்றிரி சிந்தையிடுஞ் சிற்றம் பலத்தை வரஞான தீபமிட் டார்க்குப்பரி சிற்றம் பலத்தை யருளுஞ்செந் துாரர் பகைக்குலமாஞ் சிற்றம் பலத்தைப் பதவரந் தோளிலிந் தீவரமே.