பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி ஞானச் சுடர்விளக் கேற்றினள் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான் எனவரும் பூதத் தாழ்வார் பாடலையும் பார்க்க 39. நின்பதமே துணை தீவர கந்தரி தாம்பகி ராருற வாணசெம்பொன் றிவர கந்தரி யாநொந்த போதினிற் செச்சையவிந் தீவர கந்தரி சிந்துரை பாக சிவகரண தீவர கந்த ரி.புதி ருணதடி சேமநட்பே. (ப உ) தீ-தீய்ந்துபோன, வரகு - வரகென்னுந்தானியத்தில், அந்து - வண்டுகளால், அரி அரிக்கப்பட்ட பதரையும், தாம் பகிரார் - தாம் பங்கிட்டுக் கொடார்கள், உறவான உறவினராய், செம்பொன் தீவர் - சிவந்த பொன் விளையுந்தீவிலிருப்பவரும், அகம்தரியா - பாவத்தைத் தரித்து மனம் பொறுக்கக்கூடாமல், நொந்த போதினில் வருத்துங் காலத்தில், செச்சைய வெட்சிமாலையை யுடையோனே! இந்திவர - செங்கழுநீர்மாலையை யுடையோனே கந்தரி - மலைக்குகையிலிருந்த வள்ளிநாயகியையும், சிந்துரை - அயிராவதத்தினிடம் வளர்ந்த தெய்வயானை நாயகியையும், பாக இரு பக்தத்திலு முடையவனே! சிவகரண - சிவகரணம் புரிகின்ற, தி புத்தியை, வர - வரமாகக் கொடுக்கின்ற, கந்த குமாரக் கடவுளே ரிபு - சத்துருக்களை தீர் - சம்மாரஞ் செய்யத்தக்க உனது அடி-உனது திருவடித்தாமரையே, சேம நட்பு - பொக்கிஷமும் உயிர்த்துணையுமாம். (எ று) அடி - எழுவாய், சேமநட்பு பயனிலை ஏ-அசை (க உ) வெட்சிமாலையையும் செங்கழுநீர் மாலையையும் அணிகின்றவனே! வள்ளி தெய்வயானை பாகனே! சிவகரண அறிவினர்களுக்கு அநுக்கிரகஞ் செய்கின்றவனே! எனக்கு உறவென்பவர்கள் பொன் விளையுந் தீவில் இருப்பவராயினும், வறுமையால் வருந்துங் காலத்தில் அந்து - அரித்துத் தீய்ந்த வரகையாவது உதவவல்லரோ? ஆதலின் உனது திருவடியே பொக்கிஷமும் உறவுமாம்.