பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 முருகவேள் திருமுறை 18ஆம் திருமுறை மாமரமாய் நின்ற சூரனை வென்றவனே! இடபமணியோடு காமனது சின்னங்களாகிய அன்றிலும், தென்றலும், கரும்பும், தாமரைப்பூவும், கடலும் என்னை வருத்துகின்றன. (கு உ) அந்தணர் - அசுரரது தடையை விலக்கச் சூரியனுக்கு கருதி அந்தணர் யாவருந் தங்கடன் கழிப்பச் சுருதி யென்னும்வெஞ் சாயமே லம்புகை தொடுத்துப் பருதி தன்பெரும் பகைவர்மேல் விடுத்தலிற் பரந்த குருதியாமென நிவந்தெழச் சிவந்தது குடபால் (அம்பு = ஜூலம்) வில்லி = பாரதம் - கிருஷ்ண 86. அருக்கனை மேல் தானவர் சூழ்ந்திடு மாறெனைப் போர்செய - கோடீச்சுரக்கோவை 373. இவ்வசுரர் மந்தேகர் எனப்படுவர், சூரியன் உதிக்கும் போதும் அத்தமிக்கும்போதும் அக் கடவுளைத் தினந்தோறும் தடுத்து எதிர்த்து இறந்திறந்து பிறக்கும் ஒருசார் இராக்கதர் மந்தேகர். நெடும்படைகளால் உடன்ற மந்தேகர்' - வில்லி பாரதம் - கிருஷ்ண 87. கதிரவன். குடபால் வெற்பில் எதிருறும் அரக்கர் என்றும் இகலுமா வேட்டையாடி’ - திருவிடைமருதுார் புராணம் வரகுண -13. தக்கயாகப் பரணி 124ன் விசேடக் குறிப்பும் பார்க்க காமமிக்கு விரகதாபம் கொண்டவரை அன்றில், தென்றல், விடையின் மணிஒலி, மன்மதன்வில், பாணம், கடல் வருத்துவது: அந்தாதி பாடல் 9ம் பார்க்க திருப்புகழ் 218 பக்கம் 5354 கீழ்க்குறிப்பும் பார்க்க 41. நரகில் விழா வண்ணம் காத்தருள் தெண்டன் புரந்தர வக்குன்றில் வாழ்கந்த சிந்துவிலுத் தெண்டன் புரந்தர லோகஞ் செறாதுசெற் றோய்களைவாய் தெண்டன் புரந்தர நற்கேள் சிறுவ ரழச்செய்தெம்மைத் தெண்டன் புரந்தர வின்படி நூக்கிய நரகே