பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க|lத பங்கபl |', வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் புங்கணகப் பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே. (பொ. உ) (ஒருவரை) ஒப்பற்ற சிவபெருமானைத் தனது பாகத்தே கொண்ட தேவி - பார்வதியின் குமாரனாம் முருகனஅது (உடைமணி சேர் திருவரைக் கிண்கிணி) உடைமணி என்னும் ஆபரணம் சேர்ந்துள்ள திருவரையிற் கட்டியுள்ள கிண்கிணியின் ஒசை (பட) உண்டாக, அதைக் கேட்டுத் (திடுக்கிட்டு அரக்கர் வெருவர) அரக்கர் திடுக்கிட்டு அஞ்ச, திக்கு அஷ்ட திசையில் உள்ளவர்களும் செவிடராக, (எட்டு வெற்பும்) எட்டுத் திசையில் உள்ள எட்டு மலைகளும், (கனகப்பருவரைக் குன்றும்) பொன்மலையாகிய பெரிய மலையாம் ம்ேருகிரியும் அதிர்ச்சி அடைந்தன; தேவர்கள் பயம் நீங்கி (மகிழ்ந்தார்கள்) (சு உ) முருகவேளின் கிண்கிணி ஓசை கேட்டு அரக்கர்கள் அஞ்சினர்; மலைகள் அதிர்ந்தன; தேவர்கள் பயம் நீங்கினர். (கு உ) உடைமணி = குழந்தைகளின் அரையணி உடைமணி கட்டிச் சிறுதேர் உருட்டி" - திருக்கோவை 385. "உடைமணியொடணிசகல மணிகலென"- சீர்பாத வகுப்பு முருகன் அறையிற் கட்டிய கிண்கிணி ஒலியின் வன்மையை 93ஆம் பாடலிலும் பார்க்க 14. பிரார்த்தனை ஈடேற குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த இப்பாச நெஞ்சனை யீடேற்று வாயிரு நான்குவெற்பும் அப்பாதி யாய்விழ மேருங் குலுங்க விண் ணாருமுய்யச் சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே (அந்) இருநான்குவெற்பும். சண்முகனே குப்பாச வாழ்க்கையுட் * ஈடேற்றுவாய். (பொ. உ) (இரு நான்கு வெற்பும்) எட்டுத் திசையில் உள்ள எட்டு மலைகளும் - அப் பாதியாய் - அந்தப் பாதி பாதியாய் உடைபட்டு விழ மேரு மலையும் (குலுங்க) அதிர்ச்சி கொண்டு நடுங்க தேவர்களும் பிழைத்து ஈடேறச் (சப்பாணி கொட்டிய (கை) கொட்டின கைகள் (ஆறிரண்டு) பன்னிரண்டு உடைய சண்முகப் பெருமானே (கு பாச-வாழ்க்கையுள்)-இழிவானதும் - பாசங்களுக்கு ஆசைகளுக்கு இடமானது மான உலக வாழ்க்கையிற் கூத்தாடுகின்ற (ஐவரில்) மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளால் (கொட்பு அடைந்த மனச்சுழற்சி - கலக்கம் அடைகின்ற இந்த்ப் (பாச